Sunday, March 30, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 30

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 30, ஸ்ரீ நாராயணீயம் 30வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam


த³ஶகம் -30
வாமன அவதாரம்

शक्रेण संयति हतोऽपि बलिर्महात्मा
शुक्रेण जीविततनु: क्रतुवर्धितोष्मा ।
विक्रान्तिमान् भयनिलीनसुरां त्रिलोकीं
चक्रे वशे स तव चक्रमुखादभीत: ॥१॥

ஶக்ரேண ஸம்யதி ஹதோ(அ)பி ப₃லிர்மஹாத்மா
ஶுக்ரேண ஜீவிததநு: க்ரதுவர்தி₄தோஷ்மா |
விக்ராந்திமாந் ப₄யநிலீநஸுராம் த்ரிலோகீம்
சக்ரே வஶே ஸ தவ சக்ரமுகா₂த₃பீ₄த: || 1||

1. பரந்த மனமுடைய மகாபலி என்பவன் இந்திரனால் போரில் கொல்லப்பட்டான். அசுரகுரு சுக்ராச்சாரியார் மீண்டும் அவனை உயிர்ப்பித்தார். ‘விஸ்வஜித்’ என்ற யாகத்தால் அவனுக்கு மிகுந்த சக்தி கிடைக்கச் செய்தார். அவன் மிகுந்த பராக்கிரமத்துடன், தங்கள் சக்ராயுதத்தைக் கண்டும் அஞ்சாமல், தேவர்கள் ஓடி ஒளிந்துகொண்ட மூவுலகங்களையும் தன் வசமாக்கிக் கொண்டான். 

पुत्रार्तिदर्शनवशाददितिर्विषण्णा
तं काश्यपं निजपतिं शरणं प्रपन्ना ।
त्वत्पूजनं तदुदितं हि पयोव्रताख्यं
सा द्वादशाहमचरत्त्वयि भक्तिपूर्णा ॥२॥

புத்ரார்தித₃ர்ஶநவஶாத₃தி₃திர்விஷண்ணா
தம் காஶ்யபம் நிஜபதிம் ஶரணம் ப்ரபந்நா |
த்வத்பூஜநம் தது₃தி₃தம் ஹி பயோவ்ரதாக்₂யம்
ஸா த்₃வாத₃ஶாஹமசரத்த்வயி ப₄க்திபூர்ணா || 2||

2. தன் புதல்வர்களான தேவர்களின் துன்பம் கண்டு, அவர்கள் தாயான அதிதி, தன் கணவரான காச்யபரை சரணடைந்தாள். அவரது உபதேசப்படி தங்களிடத்தில் பக்தியுடன் பன்னிரண்டு நாட்கள் ‘பயோவ்ரதம்’ என்ற பூஜையைச் செய்தாள்.

तस्यावधौ त्वयि निलीनमतेरमुष्या:
श्यामश्चतुर्भुजवपु: स्वयमाविरासी: ।
नम्रां च तामिह भवत्तनयो भवेयं
गोप्यं मदीक्षणमिति प्रलपन्नयासी: ॥३॥

தஸ்யாவதௌ₄ த்வயி நிலீநமதேரமுஷ்யா:
ஶ்யாமஶ்சதுர்பு₄ஜவபு: ஸ்வயமாவிராஸீ: |
நம்ராம் ச தாமிஹ ப₄வத்தநயோ ப₄வேயம்
கோ₃ப்யம் மதீ₃க்ஷணமிதி ப்ரலபந்நயாஸீ: || 3||

3. விரதத்தின் முடிவில், அதிதியின் முன்னால் நீலமேனியுடன், நான்கு கரங்களுடன் தோன்றினீர்கள். தங்களைத் துதித்த அதிதியைப் பார்த்து, “உன்னுடைய மகனாகப் பிறக்கப் போகிறேன், என்னைக் கண்டதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திரு” என்று கூறி மறைந்தீர்கள்.

त्वं काश्यपे तपसि सन्निदधत्तदानीं
प्राप्तोऽसि गर्भमदिते: प्रणुतो विधात्रा ।
प्रासूत च प्रकटवैष्णवदिव्यरूपं
सा द्वादशीश्रवणपुण्यदिने भवन्तं ॥४॥

த்வம் காஶ்யபே தபஸி ஸந்நித₃த₄த்ததா₃நீம்
ப்ராப்தோ(அ)ஸி க₃ர்ப₄மதி₃தே: ப்ரணுதோ விதா₄த்ரா |
ப்ராஸூத ச ப்ரகடவைஷ்ணவதி₃வ்யரூபம்
ஸா த்₃வாத₃ஶீஶ்ரவணபுண்யதி₃நே ப₄வந்தம் || 4||

4. காச்யப முனிவரின் தவத்தினால் உண்டான வீர்யத்தில் பிரவேசித்து, அதிதியின் கர்ப்பத்தை அடைந்தீர்கள். பிரமன் தங்களைத் துதித்தான். துவாதசியும், திருவோண நட்சத்திரமும் கூடிய புண்ணிய நன்னாளில், சங்கு, சக்ரம் முதலிய அடையாளங்களுடன் கூடிய திவ்யரூபம் கொண்ட தங்களை, அதிதி பெற்றெடுத்தாள்.

पुण्याश्रमं तमभिवर्षति पुष्पवर्षै-
र्हर्षाकुले सुरगणे कृततूर्यघोषे ।
बध्वाऽञ्जलिं जय जयेति नुत: पितृभ्यां
त्वं तत्क्षणे पटुतमं वटुरूपमाधा: ॥५॥

புண்யாஶ்ரமம் தமபி₄வர்ஷதி புஷ்பவர்ஷை-
ர்ஹர்ஷாகுலே ஸுரக₃ணே க்ருததூர்யகோ₄ஷே |
ப₃த்₄வா(அ)ஞ்ஜலிம் ஜய ஜயேதி நுத: பித்ருப்₄யாம்
த்வம் தத்க்ஷணே படுதமம் வடுரூபமாதா₄: || 5||

5. தேவர்கள், மங்கள வாத்தியங்களை முழங்கி, ஆசிரமத்தில் பூமாரி பொழிந்து, தங்களைத் துதித்தனர். பெற்றோர் கைகூப்பித் தொழுது  கொண்டிருக்கும்போதே மிக வேகமாக பிரம்மசாரி ரூபத்தை எடுத்தீர்கள்.

तावत्प्रजापतिमुखैरुपनीय मौञ्जी-
दण्डाजिनाक्षवलयादिभिरर्च्यमान: ।
देदीप्यमानवपुरीश कृताग्निकार्य-
स्त्वं प्रास्थिथा बलिगृहं प्रकृताश्वमेधम् ॥६॥

தாவத்ப்ரஜாபதிமுகை₂ருபநீய மௌஞ்ஜீ-
த₃ண்டா₃ஜிநாக்ஷவலயாதி₃பி₄ரர்ச்யமாந: |
தே₃தீ₃ப்யமாநவபுரீஶ க்ருதாக்₃நிகார்ய-
ஸ்த்வம் ப்ராஸ்தி₂தா₂ ப₃லிக்₃ருஹம் ப்ரக்ருதாஶ்வமேத₄ம் || 6||

6. ஈசனே! அப்போதே கச்யப பிரஜாபதி முதலியோர் உமக்கு உபநயனம் செய்வித்தனர். முஞ்சிக்கயிறு, பலாசதண்டம், மான் தோல், ருத்ராக்ஷமாலை, கங்கணம் ஆகியவற்றை அணிந்து பிரகாசத்துடன் காட்சி அளித்தீர்கள். அக்னியில் சமித்துக்களால் ஹோமம் செய்தீர்கள். பிறகு, மகாபலியின் அசுவமேத யாகம் நடக்கும் இடத்திற்குக் கிளம்பினீர்கள்.

गात्रेण भाविमहिमोचितगौरवं प्रा-
ग्व्यावृण्वतेव धरणीं चलयन्नायासी: ।
छत्रं परोष्मतिरणार्थमिवादधानो
दण्डं च दानवजनेष्विव सन्निधातुम् ॥७॥

கா₃த்ரேண பா₄விமஹிமோசிதகௌ₃ரவம் ப்ரா-
க்₃வ்யாவ்ருண்வதேவ த₄ரணீம் சலயந்நாயாஸீ: |
ச₂த்ரம் பரோஷ்மதிரணார்த₂மிவாத₃தா₄நோ
த₃ண்ட₃ம் ச தா₃நவஜநேஷ்விவ ஸந்நிதா₄தும் || 7||

7. வரப்போகும் மகத்தான அவதாரத்திற்கு முன்னோடியாக, தங்கள் பலத்தால் பூமி அசைந்தது. அசுரர்களின் பராக்கிரமத்தை மறைப்பதுபோல் குடையையும், அவர்களைத் தண்டிப்பதற்குப்போல் தண்டத்தையும் தாங்கிச் சென்றீர்கள்.

तां नर्मदोत्तरतटे हयमेधशाला-
मासेदुषि त्वयि रुचा तव रुद्धनेत्रै: ।
भास्वान् किमेष दहनो नु सनत्कुमारो
योगी नु कोऽयमिति शुक्रमुखैश्शशङ्के ॥८॥

தாம் நர்மதோ₃த்தரதடே ஹயமேத₄ஶாலா-
மாஸேது₃ஷி த்வயி ருசா தவ ருத்₃த₄நேத்ரை: |
பா₄ஸ்வாந் கிமேஷ த₃ஹநோ நு ஸநத்குமாரோ
யோகீ₃ நு கோ(அ)யமிதி ஶுக்ரமுகை₂ஶ்ஶஶங்கே || 8||

8. நர்மதை ஆற்றின் வடகரையில் உள்ள அஸ்வமேத யாகசாலையை அடைந்த தங்களைக் கண்ட சுக்ராச்சார்யார் போன்றோரின் கண்கள் கூசிற்று. இவர் சூரியனோ, அக்னியோ, சனத்குமாரரோ என்று சந்தேகித்தனர். 

आनीतमाशु भृगुभिर्महसाऽभिभूतै-
स्त्वां रम्यरूपमसुर: पुलकावृताङ्ग: ।
भक्त्या समेत्य सुकृती परिणिज्य पादौ
तत्तोयमन्वधृत मूर्धनि तीर्थतीर्थम् ॥९॥

ஆநீதமாஶு ப்₄ருகு₃பி₄ர்மஹஸா(அ)பி₄பூ₄தை-
ஸ்த்வாம் ரம்யரூபமஸுர: புலகாவ்ருதாங்க₃: |
ப₄க்த்யா ஸமேத்ய ஸுக்ருதீ பரிணிஜ்ய பாதௌ₃
தத்தோயமந்வத்₄ருத மூர்த₄நி தீர்த₂தீர்த₂ம் || 9||

9. தங்கள் தேககாந்தியால் பிரமித்த சுக்ராச்சார்யாரும், மற்றவர்களும் தங்களை வரவேற்று யாகசாலைக்கு அழைத்துச் சென்றனர். அசுரனாக இருந்தாலும், புண்ணியசாலியான அந்த மகாபலி, உடல் புல்லரிக்க, பக்தியுடன் தங்கள் பாதங்களை அலம்பி, எல்லா தீர்த்தங்களையும் புனிதமாக்கும் தங்கள் பாத தீர்த்தத்தை தன் தலையில் தெளித்துக்கொண்டான்.

प्रह्लादवंशजतया क्रतुभिर्द्विजेषु
विश्वासतो नु तदिदं दितिजोऽपि लेभे ।
यत्ते पदाम्बु गिरिशस्य शिरोभिलाल्यं
स त्वं विभो गुरुपुरालय पालयेथा: ॥१०॥

ப்ரஹ்லாத₃வம்ஶஜதயா க்ரதுபி₄ர்த்₃விஜேஷு
விஶ்வாஸதோ நு ததி₃த₃ம் தி₃திஜோ(அ)பி லேபே₄ |
யத்தே பதா₃ம்பு₃ கி₃ரிஶஸ்ய ஶிரோபி₄லால்யம்
ஸ த்வம் விபோ₄ கு₃ருபுராலய பாலயேதா₂: || 10||

10. எங்கும் நிறைந்தவனே! பரமசிவன் தன் தலையில் தரித்துக் கொண்ட, சிறப்பு வாய்ந்த அந்த தீர்த்தத்தை அசுரனான மகாபலி தன் தலையில் தெளித்துக்கொண்டான். பிரஹ்லாதனுடைய வம்சத்தில் தோன்றியதாலோ, அந்தணர்களிடத்தில் கொண்ட அன்பினாலோ, பல யாகங்களைச் செய்ததாலோ மகாபலிக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. குருவாயூரில் வசிக்கும் குருவாயூரப்பனே! தங்கள் ரக்ஷிக்கவேண்டும்.

No comments:

Post a Comment