Saturday, March 8, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 8

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 8, ஸ்ரீ நாராயணீயம் 8வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம்-8
மஹாப்ரளயத்திற்குப் பின் உலகைப் படைத்தல்

एवं तावत् प्राकृतप्रक्षयान्ते
ब्राह्मे कल्पे ह्यादिमे लब्धजन्मा ।
ब्रह्मा भूयस्त्वत्त एवाप्य वेदान्
सृष्टिं चक्रे पूर्वकल्पोपमानाम् ॥१॥

ஏவம் தாவத் ப்ராக்ருதப்ரக்ஷயாந்தே
ப்₃ராஹ்மே கல்பே ஹ்யாதி₃மே லப்₃த₄ஜந்மா |
ப்₃ரஹ்மா பூ₄யஸ்த்வத்த ஏவாப்ய வேதா₃ந்
ஸ்ருஷ்டிம் சக்ரே பூர்வகல்போபமாநாம் || 1||

1. இவ்வாறு மகாப்ரளயத்தின் முடிவில் ப்ரும்ம கல்பத்தில் ப்ரும்மதேவன் தோன்றி, உன்னிடமிருந்தே வேதங்களைப் பெற்று, முன் கல்பத்தில் இருந்தது போன்ற படைப்பைச் செய்தார்.

सोऽयं चतुर्युगसहस्रमितान्यहानि
तावन्मिताश्च रजनीर्बहुशो निनाय ।
निद्रात्यसौ त्वयि निलीय समं स्वसृष्टै-
र्नैमित्तिकप्रलयमाहुरतोऽस्य रात्रिम् ॥२॥

ஸோ(அ)யம் சதுர்யுக₃ஸஹஸ்ரமிதாந்யஹாநி
தாவந்மிதாஶ்ச ரஜநீர்ப₃ஹுஶோ நிநாய |
நித்₃ராத்யஸௌ த்வயி நிலீய ஸமம் ஸ்வஸ்ருஷ்டை-
ர்நைமித்திகப்ரலயமாஹுரதோ(அ)ஸ்ய ராத்ரிம் || 2||

2. அவர், நான்காயிரம் யுகங்களான இரவு பகல்களைக் கழித்து, தன்னால் படைக்கப்பட்ட உலகங்களுடன் உன்னிடத்தில் மறைந்து தூங்கினார். அவருடைய இந்த இரவை நைமித்திக ப்ரளயம் என்று கூறுகின்றனர்.

अस्मादृशां पुनरहर्मुखकृत्यतुल्यां
सृष्टिं करोत्यनुदिनं स भवत्प्रसादात् ।
प्राग्ब्राह्मकल्पजनुषां च परायुषां तु
सुप्तप्रबोधनसमास्ति तदाऽपि सृष्टि: ॥३॥

அஸ்மாத்₃ருஶாம் புநரஹர்முக₂க்ருத்யதுல்யாம்
ஸ்ருஷ்டிம் கரோத்யநுதி₃நம் ஸ ப₄வத்ப்ரஸாதா₃த் |
ப்ராக்₃ப்₃ராஹ்மகல்பஜநுஷாம் ச பராயுஷாம் து
ஸுப்தப்ரபோ₃த₄நஸமாஸ்தி ததா₃(அ)பி ஸ்ருஷ்டி: || 3||

3. எங்களைப் போன்றவர்களின் காலைக் கடன்களுக்கு ஒப்பான படைத்தலை உன்னுடைய அருளால் செய்கிறார். முந்தைய பிரம்மா கல்பத்தில் தோன்றிய சிரஞ்சீவிகளுடைய படைப்பு, தூங்கி விழிப்பதற்கு சமமாக இருக்கிறது.

पञ्चाशदब्दमधुना स्ववयोर्धरूप-
मेकं परार्धमतिवृत्य हि वर्ततेऽसौ ।
तत्रान्त्यरात्रिजनितान् कथयामि भूमन्
पश्चाद्दिनावतरणे च भवद्विलासान् ॥४॥

பஞ்சாஶத₃ப்₃த₃மது₄நா ஸ்வவயோர்த₄ரூப-
மேகம் பரார்த₄மதிவ்ருத்ய ஹி வர்ததே(அ)ஸௌ |
தத்ராந்த்யராத்ரிஜநிதாந் கத₂யாமி பூ₄மந்
பஶ்சாத்₃தி₃நாவதரணே ச ப₄வத்₃விலாஸாந் || 4||

4. ப்ரும்மன் இப்போது தன்னுடைய ஆயுளான ஐம்பது வருஷங்கள் அடங்கிய ஒரு பரார்த்தத்தை(ஒரு கோடி ஆண்டுகள்) தாண்டி இருக்கிறார் என்பது பிரசித்தம். எங்கும் நிறைந்தவனே! அதில், கடைசி இரவிலும், அடுத்த நாள் ஆரம்பத்திலும் நிகழ்ந்த உங்கள் லீலைகளைச் சொல்கிறேன். 

दिनावसानेऽथ सरोजयोनि:
सुषुप्तिकामस्त्वयि सन्निलिल्ये ।
जगन्ति च त्वज्जठरं समीयु-
स्तदेदमेकार्णवमास विश्वम् ॥५॥

தி₃நாவஸாநே(அ)த₂ ஸரோஜயோநி:
ஸுஷுப்திகாமஸ்த்வயி ஸந்நிலில்யே |
ஜக₃ந்தி ச த்வஜ்ஜட₂ரம் ஸமீயு-
ஸ்ததே₃த₃மேகார்ணவமாஸ விஶ்வம் || 5||

5. ப்ரும்மன், தன்னுடைய பகலின் முடிவில் நித்திரையை விரும்பி உன்னிடத்தில் ஐக்யமானார். மூவுலகங்களும் உன்னுடைய வயிற்றில் அடங்கின. இந்த உலகம் சமுத்திரமாக ஆயிற்று.

तवैव वेषे फणिराजि शेषे
जलैकशेषे भुवने स्म शेषे ।
आनन्दसान्द्रानुभवस्वरूप:
स्वयोगनिद्रापरिमुद्रितात्मा ॥६॥

தவைவ வேஷே ப₂ணிராஜி ஶேஷே
ஜலைகஶேஷே பு₄வநே ஸ்ம ஶேஷே |
ஆநந்த₃ஸாந்த்₃ராநுப₄வஸ்வரூப:
ஸ்வயோக₃நித்₃ராபரிமுத்₃ரிதாத்மா || 6||

6. உலகமெங்கும் தண்ணீர் மட்டுமே மீதமாக இருந்தது. ஆனந்த வடிவமாகவும், ஞான வடிவமாகவும் உள்ள தாங்கள், ஆதிசேஷன் மேல் நித்திரை கொண்டிருந்தீர்கள். 

कालाख्यशक्तिं प्रलयावसाने
प्रबोधयेत्यादिशता किलादौ ।
त्वया प्रसुप्तं परिसुप्तशक्ति-
व्रजेन तत्राखिलजीवधाम्ना ॥७॥

காலாக்₂யஶக்திம் ப்ரலயாவஸாநே
ப்ரபோ₃த₄யேத்யாதி₃ஶதா கிலாதௌ₃ |
த்வயா ப்ரஸுப்தம் பரிஸுப்தஶக்தி-
வ்ரஜேந தத்ராகி₂லஜீவதா₄ம்நா || 7||

7. அந்த சமயத்தில் எல்லா சக்திகளும் உம்மிடத்தில் அடங்கியிருந்தன. அதில் கால சக்தியை பிரளய முடிவில் தங்களை எழுப்புமாறு கட்டளை இட்டிருந்தீர்கள். பிறகு ஆதிசேஷன் மீது உறங்கினீர்களாமே?

चतुर्युगाणां च सहस्रमेवं
त्वयि प्रसुप्ते पुनरद्वितीये ।
कालाख्यशक्ति: प्रथमप्रबुद्धा
प्राबोधयत्त्वां किल विश्वनाथ ॥८॥

சதுர்யுகா₃ணாம் ச ஸஹஸ்ரமேவம்
த்வயி ப்ரஸுப்தே புநரத்₃விதீயே |
காலாக்₂யஶக்தி: ப்ரத₂மப்ரபு₃த்₃தா₄
ப்ராபோ₃த₄யத்த்வாம் கில விஶ்வநாத₂ || 8||

8. லோகநாதனே! இவ்வாறு ஆயிரம் சதுர்யுகங்கள் தூங்கினீர்கள். அப்போது, கால சக்தி முதலில் எழுந்து, தங்களை எழுப்பியது அல்லவா?


विबुध्य च त्वं जलगर्भशायिन्
विलोक्य लोकानखिलान् प्रलीनान् ।
तेष्वेव सूक्ष्मात्मतया निजान्त: -
स्थितेषु विश्वेषु ददाथ दृष्टिम् ॥९॥

விபு₃த்₄ய ச த்வம் ஜலக₃ர்ப₄ஶாயிந்
விலோக்ய லோகாநகி₂லாந் ப்ரலீநாந் |
தேஷ்வேவ ஸூக்ஷ்மாத்மதயா நிஜாந்த: -
ஸ்தி₂தேஷு விஶ்வேஷு த₃தா₃த₂ த்₃ருஷ்டிம் || 9||

9. பிரளய நீரில் படுத்திருந்த நீங்கள், விழித்ததும், அனைத்து உலகங்களும் உம்மிடத்தில் மறைந்திருக்கக் கண்டீர். ஸூக்ஷ்ம வடிவில் இருந்த அந்த உலகங்களின் மீது தங்களுடைய அருள் பார்வை விழுந்ததாமே?

ततस्त्वदीयादयि नाभिरन्ध्रा-
दुदञ्चितं किंचन दिव्यपद्मम् ।
निलीननिश्शेषपदार्थमाला-
संक्षेपरूपं मुकुलायमानम् ॥१०॥

ததஸ்த்வதீ₃யாத₃யி நாபி₄ரந்த்₄ரா-
து₃த₃ஞ்சிதம் கிம்சந தி₃வ்யபத்₃மம் |
நிலீநநிஶ்ஶேஷபதா₃ர்த₂மாலா-
ஸம்க்ஷேபரூபம் முகுலாயமாநம் || 10||

10. உடனே, உம்முடைய நாபியிலிருந்து ஒரு அழகிய தாமரை மொட்டு உண்டானது. அதில் உம்மிடம் ஐக்யமான எல்லா ஜீவன்களும், சாதனங்களும் அடங்கிருந்தன.

तदेतदंभोरुहकुड्मलं ते
कलेवरात् तोयपथे प्ररूढम् ।
बहिर्निरीतं परित: स्फुरद्भि:
स्वधामभिर्ध्वान्तमलं न्यकृन्तत् ॥११॥

ததே₃தத₃ம்போ₄ருஹகுட்₃மலம் தே
கலேவராத் தோயபதே₂ ப்ரரூட₄ம் |
ப₃ஹிர்நிரீதம் பரித: ஸ்பு₂ரத்₃பி₄:
ஸ்வதா₄மபி₄ர்த்₄வாந்தமலம் ந்யக்ருʼந்தத் || 11||

11. அந்த மொட்டு, நீரினுள்ளே இருந்து நீருக்கு மேலே வளர்ந்தது. அது, தன்னுடைய பிரகாசத்தால், பிரளயகால இருட்டை போக்கியது.

संफुल्लपत्रे नितरां विचित्रे
तस्मिन् भवद्वीर्यधृते सरोजे ।
स पद्मजन्मा विधिराविरासीत्
स्वयंप्रबुद्धाखिलवेदराशि: ॥१२॥

ஸம்பு₂ல்லபத்ரே நிதராம் விசித்ரே
தஸ்மிந் ப₄வத்₃வீர்யத்₄ருதே ஸரோஜே |
ஸ பத்₃மஜந்மா விதி₄ராவிராஸீத்
ஸ்வயம்ப்ரபு₃த்₃தா₄கி₂லவேத₃ராஶி: || 12||

12. அந்த மொட்டு நன்கு மலர்ந்தது. அதிலிருந்து பத்மஜன் என்ற ப்ரும்மதேவன் உண்டானார். அவருக்கு முன்பு கற்ற வேதங்கள் நினைவுக்கு வந்தன.

अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
अनन्तभूमा मम रोगराशिं
निरुन्धि वातालयवास विष्णो ॥१३॥

இந்த ஸ்லோகத்தைப் படித்தால் ரோகங்கள் விலகும்.

அஸ்மிந் பராத்மந் நநு பாத்₃மகல்பே
த்வமித்த₂முத்தா₂பிதபத்₃மயோநி: |
அநந்தபூ₄மா மம ரோக₃ராஶிம்
நிருந்தி₄ வாதாலயவாஸ விஷ்ணோ || 13||

13.  விஷ்ணுவே! குருவாயூரில் வசிப்பவனே! எல்லையில்லா மகிமை உடையவரும், பத்ம கல்பத்தில் ப்ரும்மதேவரைப் படைத்தவருமான தாங்கள் என்னுடைய ரோகக்கூட்டங்களைப் போக்க வேண்டும்.

No comments:

Post a Comment