Thursday, April 3, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 34

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 34, ஸ்ரீ நாராயணீயம் 34வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -34
ஸ்ரீ ராமாவதாரம் 

गीर्वाणैरर्थ्यमानो दशमुखनिधनं कोसलेष्वृश्यशृङ्गे
पुत्रीयामिष्टिमिष्ट्वा ददुषि दशरथक्ष्माभृते पायसाग्र्यम् ।
तद्भुक्त्या तत्पुरन्ध्रीष्वपि तिसृषु समं जातगर्भासु जातो
रामस्त्वं लक्ष्मणेन स्वयमथ भरतेनापि शत्रुघ्ननाम्ना ॥१॥

கீ₃ர்வாணைரர்த்₂யமாநோ த₃ஶமுக₂நித₄நம் கோஸலேஷ்வ்ருஶ்யஶ்ருங்கே₃
புத்ரீயாமிஷ்டிமிஷ்ட்வா த₃து₃ஷி த₃ஶரத₂க்ஷ்மாப்₄ருதே பாயஸாக்₃ர்யம் |
தத்₃பு₄க்த்யா தத்புரந்த்₄ரீஷ்வபி திஸ்ருஷு ஸமம் ஜாதக₃ர்பா₄ஸு ஜாதோ
ராமஸ்த்வம் லக்ஷ்மணேந ஸ்வயமத₂ ப₄ரதேநாபி ஶத்ருக்₄நநாம்நா || 1||

1. ரிஷ்யஸ்ருங்க முனிவர், தசரதர் வேண்டிக்கொண்டதன்பேரில், புத்ரகாமேஷ்டி யாகம் நடத்தி, அதில் கிடைத்த உத்தமமான பாயசத்தை தசரதருக்குக் கொடுத்தார். அவனது மனைவியர் மூவரும் அந்தப் பாயசத்தைத் உண்டு கர்ப்பம் தரித்தனர். ராவணனை வதம் செய்யத்  தேவர்கள் வேண்டியதால், தாங்கள் அந்த மூவரிடமும், பரதனோடும், லக்ஷ்மணனோடும், சத்ருக்னனோடும் ராமனாக அவதரித்தீர்கள்.

कोदण्डी कौशिकस्य क्रतुवरमवितुं लक्ष्मणेनानुयातो
यातोऽभूस्तातवाचा मुनिकथितमनुद्वन्द्वशान्ताध्वखेद: ।
नृणां त्राणाय बाणैर्मुनिवचनबलात्ताटकां पाटयित्वा
लब्ध्वास्मादस्त्रजालं मुनिवनमगमो देव सिद्धाश्रमाख्यम् ॥२॥

கோத₃ண்டீ₃ கௌஶிகஸ்ய க்ரதுவரமவிதும் லக்ஷ்மணேநாநுயாதோ
யாதோ(அ)பூ₄ஸ்தாதவாசா முநிகதி₂தமநுத்₃வந்த்₃வஶாந்தாத்₄வகே₂த₃: |
ந்ருணாம் த்ராணாய பா₃ணைர்முநிவசநப₃லாத்தாடகாம் பாடயித்வா
லப்₃த்₄வாஸ்மாத₃ஸ்த்ரஜாலம் முநிவநமக₃மோ தே₃வ ஸித்₃தா₄ஶ்ரமாக்₂யம் || 2||

2. தேவனே! தந்தையின் சொல்லுக்கு இணங்க, கோதண்டம் ஏந்தி, லக்ஷ்மணனுடன் கூட, விஸ்வாமித்திரர் செய்த யாகத்தைக் காப்பாற்றுவதற்காகச் சென்றீர்கள். முனிவர் உபதேசித்த பலா, அதிபலா மந்திரங்களால் வழிநடந்த களைப்பு நீங்க பெற்றீர்கள். முனிவர் சொல்படி தாடகையை வதம் செய்து, அவர் கொடுத்த அஸ்திரங்களைப் பெற்றுக்கொண்டு, சித்தாஸ்ரமம் என்ற முனிவனத்தை அடைந்தீர்கள்.

मारीचं द्रावयित्वा मखशिरसि शरैरन्यरक्षांसि निघ्नन्
कल्यां कुर्वन्नहल्यां पथि पदरजसा प्राप्य वैदेहगेहम् ।
भिन्दानश्चान्द्रचूडं धनुरवनिसुतामिन्दिरामेव लब्ध्वा
राज्यं प्रातिष्ठथास्त्वं त्रिभिरपि च समं भ्रातृवीरैस्सदारै: ॥३॥

மாரீசம் த்₃ராவயித்வா மக₂ஶிரஸி ஶரைரந்யரக்ஷாம்ஸி நிக்₄நந்
கல்யாம் குர்வந்நஹல்யாம் பதி₂ பத₃ரஜஸா ப்ராப்ய வைதே₃ஹகே₃ஹம் |
பி₄ந்தா₃நஶ்சாந்த்₃ரசூட₃ம் த₄நுரவநிஸுதாமிந்தி₃ராமேவ லப்₃த்₄வா
ராஜ்யம் ப்ராதிஷ்ட₂தா₂ஸ்த்வம் த்ரிபி₄ரபி ச ஸமம் ப்₄ராத்ருவீரைஸ்ஸதா₃ரை: || 3||

3. யாகத்தின் ஆரம்பத்தில் மாரீசனை பாணங்களால் விரட்டி, மற்ற அசுரர்களைக் கொன்றீர்கள். சாபத்தினால் கல்லாய்க் கிடந்த அகலிகை என்றவள், தங்கள் பாதம் பட்டதும் பெண்ணாக மாறினாள். சிவனுடைய வில்லை முறித்து, பூமாதேவியின் மகளான ஸ்ரீ மகாலக்ஷ்மியை மணம் புரிந்தீர்கள். பத்தினிகளுடன் கூடிய சகோதரர்களுடன் அயோத்தியை நோக்கிப் புறப்பட்டீர்கள்.

आरुन्धाने रुषान्धे भृगुकुल तिलके संक्रमय्य स्वतेजो
याते यातोऽस्ययोध्यां सुखमिह निवसन् कान्तया कान्तमूर्ते ।
शत्रुघ्नेनैकदाथो गतवति भरते मातुलस्याधिवासं
तातारब्धोऽभिषेकस्तव किल विहत: केकयाधीशपुत्र्या ॥४॥

ஆருந்தா₄நே ருஷாந்தே₄ ப்₄ருகு₃குல திலகே ஸம்க்ரமய்ய ஸ்வதேஜோ
யாதே யாதோ(அ)ஸ்யயோத்₄யாம் ஸுக₂மிஹ நிவஸந் காந்தயா காந்தமூர்தே |
ஶத்ருக்₄நேநைகதா₃தோ₂ க₃தவதி ப₄ரதே மாதுலஸ்யாதி₄வாஸம்
தாதாரப்₃தோ₄(அ)பி₄ஷேகஸ்தவ கில விஹத: கேகயாதீ₄ஶபுத்ர்யா || 4||

4. பிருகு குலத்திற்குத் திலகம் போன்ற பரசுராமர், கோபத்தினால் தங்களை வழிமறித்துத் தடுத்தார். தன் வலிமையைத் தங்களிடம் சேர்த்தார். பிறகு, தாங்கள் அயோத்தியை அடைந்து, சீதையுடன் வசித்து வந்தீர்கள். பரதனும், சத்ருக்னனும் மாமாவினுடைய வீட்டுக்குச் சென்றிருந்தபோது, தசரதர், தங்களுக்குப் பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்தார். அப்போது கைகேயி அதைத் தடுத்தாள். 

तातोक्त्या यातुकामो वनमनुजवधूसंयुतश्चापधार:
पौरानारुध्य मार्गे गुहनिलयगतस्त्वं जटाचीरधारी।
नावा सन्तीर्य गङ्गामधिपदवि पुनस्तं भरद्वाजमारा-
न्नत्वा तद्वाक्यहेतोरतिसुखमवसश्चित्रकूटे गिरीन्द्रे ॥५॥

தாதோக்த்யா யாதுகாமோ வநமநுஜவதூ₄ஸம்யுதஶ்சாபதா₄ர:
பௌராநாருத்₄ய மார்கே₃ கு₃ஹநிலயக₃தஸ்த்வம் ஜடாசீரதா₄ரீ|
நாவா ஸந்தீர்ய க₃ங்கா₃மதி₄பத₃வி புநஸ்தம் ப₄ரத்₃வாஜமாரா-
ந்நத்வா தத்₃வாக்யஹேதோரதிஸுக₂மவஸஶ்சித்ரகூடே கி₃ரீந்த்₃ரே || 5||

5. தந்தையின் சொல்படி, வில்லேந்தி தம்பியோடும், மனைவியோடும் கானகம் சென்றீர்கள். தங்களைப் பின்தொடர்ந்த நாட்டு மக்களைத் திருப்பி அனுப்பிவிட்டு, குகனுடைய இருப்பிடத்தையடைந்து, மரவுரியையும், ஜடாமகுடத்தையும் தரித்தீர்கள். பிறகு, தோணியின் மூலம் கங்கையைக் கடந்து, வழியில் பரத்வாஜ முனிவரை வணங்கினீர்கள். அவர் சொல்படி, சித்ரகூட மலையில் சௌக்கியமாக வசித்து வந்தீர்கள்.

श्रुत्वा पुत्रार्तिखिन्नं खलु भरतमुखात् स्वर्गयातं स्वतातं
तप्तो दत्वाऽम्बु तस्मै निदधिथ भरते पादुकां मेदिनीं च
अत्रिं नत्वाऽथ गत्वा वनमतिविपुलं दण्डकं चण्डकायं
हत्वा दैत्यं विराधं सुगतिमकलयश्चारु भो: शारभङ्गीम् ॥६॥

ஶ்ருத்வா புத்ரார்திகி₂ந்நம் க₂லு ப₄ரதமுகா₂த் ஸ்வர்க₃யாதம் ஸ்வதாதம்
தப்தோ த₃த்வா(அ)ம்பு₃ தஸ்மை நித₃தி₄த₂ ப₄ரதே பாது₃காம் மேதி₃நீம் ச
அத்ரிம் நத்வா(அ)த₂ க₃த்வா வநமதிவிபுலம் த₃ண்ட₃கம் சண்ட₃காயம்
ஹத்வா தை₃த்யம் விராத₄ம் ஸுக₃திமகலயஶ்சாரு போ₄: ஶாரப₄ங்கீ₃ம் || 6||

6. தங்களைப் பிரிந்து புத்திரசோகத்தால் தந்தை மரணமடைந்தார் என்று பரதன் மூலம் அறிந்து வருந்தி, தந்தைக்குத் தர்ப்பணம் முதலியவற்றைச் செய்தீர்கள். பரதனிடம் பாதுகைகளையும், பூமியையும் ஒப்படைத்தீர்கள். பிறகு, அத்ரி முனிவரை வணங்கி, தண்டகவனத்தை அடைந்தீர்கள். அங்கு, விராதன் என்ற அசுரனைக் கொன்று, சரபங்க முனிவருக்கு மோக்ஷம் கொடுத்தீர்கள். 

नत्वाऽगस्त्यं समस्ताशरनिकरसपत्राकृतिं तापसेभ्य:
प्रत्यश्रौषी: प्रियैषी तदनु च मुनिना वैष्णवे दिव्यचापे ।
ब्रह्मास्त्रे चापि दत्ते पथि पितृसुहृदं वीक्ष्य भूयो जटायुं
मोदात् गोदातटान्ते परिरमसि पुरा पञ्चवट्यां वधूट्या ॥७॥

நத்வா(அ)க₃ஸ்த்யம் ஸமஸ்தாஶரநிகரஸபத்ராக்ருதிம் தாபஸேப்₄ய:
ப்ரத்யஶ்ரௌஷீ: ப்ரியைஷீ தத₃நு ச முநிநா வைஷ்ணவே தி₃வ்யசாபே |
ப்₃ரஹ்மாஸ்த்ரே சாபி த₃த்தே பதி₂ பித்ருஸுஹ்ருத₃ம் வீக்ஷ்ய பூ₄யோ ஜடாயும்
மோதா₃த் கோ₃தா₃தடாந்தே பரிரமஸி புரா பஞ்சவட்யாம் வதூ₄ட்யா || 7||

7. முனிவர்களுடைய நன்மையைக் கருதி, அசுரர் கூட்டத்தை அழிக்கப் பிரதிக்ஞை செய்தீர்கள். பிறகு அகஸ்தியரை வணங்கி, விஷ்ணு வில்லையும், பிரம்மாஸ்த்ரமும் பெற்று, வழியில் தங்கள் தந்தையின் நண்பரான ஜடாயுவைப் பார்த்து சந்தோஷமடைந்தீர்கள். கோதாவரிக் கரையில், பஞ்சவடியில், சீதையுடன் வாழ்ந்து வந்தீர்கள்.

प्राप्ताया: शूर्पणख्या मदनचलधृतेरर्थनैर्निस्सहात्मा
तां सौमित्रौ विसृज्य प्रबलतमरुषा तेन निर्लूननासाम् ।
दृष्ट्वैनां रुष्टचित्तं खरमभिपतितं दूषणं च त्रिमूर्धं
व्याहिंसीराशरानप्ययुतसमधिकांस्तत्क्षणादक्षतोष्मा ॥८॥

ப்ராப்தாயா: ஶூர்பணக்₂யா மத₃நசலத்₄ருதேரர்த₂நைர்நிஸ்ஸஹாத்மா
தாம் ஸௌமித்ரௌ விஸ்ருஜ்ய ப்ரப₃லதமருஷா தேந நிர்லூநநாஸாம் |
த்₃ருஷ்ட்வைநாம் ருஷ்டசித்தம் க₂ரமபி₄பதிதம் தூ₃ஷணம் ச த்ரிமூர்த₄ம்
வ்யாஹிம்ஸீராஶராநப்யயுதஸமதி₄காம்ஸ்தத்க்ஷணாத₃க்ஷதோஷ்மா || 8||

8. சூர்ப்பணகையின் மோகம் கொண்ட பேச்சுக்களால் பொறுமையிழந்து அவளை லக்ஷ்மணனிடம் அனுப்பினீர்கள். அதிகக்  கோபம் கொண்ட லக்ஷ்மணன், அவளுடைய மூக்கை அறுத்துவிட்டார். அதைக் கண்டு போருக்கு வந்த கரதூஷணர்கள், திரிசிரஸ் மற்றும் பதினாயிரத்துக்கும் மேற்பட்ட அசுரர்களை அழித்தீர்கள். 

सोदर्याप्रोक्तवार्ताविवशदशमुखादिष्टमारीचमाया-
सारङ्ग सारसाक्ष्या स्पृहितमनुगत: प्रावधीर्बाणघातम् ।
तन्मायाक्रन्दनिर्यापितभवदनुजां रावणस्तामहार्षी-
त्तेनार्तोऽपि त्वमन्त: किमपि मुदमधास्तद्वधोपायलाभात् ॥९॥

ஸோத₃ர்யாப்ரோக்தவார்தாவிவஶத₃ஶமுகா₂தி₃ஷ்டமாரீசமாயா-
ஸாரங்க₃ ஸாரஸாக்ஷ்யா ஸ்ப்ருஹிதமநுக₃த: ப்ராவதீ₄ர்பா₃ணகா₄தம் |
தந்மாயாக்ரந்த₃நிர்யாபிதப₄வத₃நுஜாம் ராவணஸ்தாமஹார்ஷீ-
த்தேநார்தோ(அ)பி த்வமந்த: கிமபி முத₃மதா₄ஸ்தத்₃வதோ₄பாயலாபா₄த் || 9||

9. சூர்ப்பணகை சீதையைப் பற்றிச் சொன்னதைக் கேட்டு, ராவணன் பரவசமடைந்து, மாரீசனை மாயமானாகச் செல்ல ஆணையிட்டான். தாமரை போன்ற கண்களையுடைய சீதை அந்த மாயமானுக்கு ஆசைப்பட்டாள். அதனால், அதைத் தொடர்ந்து சென்று அதைக் கொன்றீர்கள். சீதை, அந்த மாயமானின் அழுகுரல் கேட்டு லக்ஷ்மணனை வெளியே அனுப்ப, ராவணன் சீதையை அபகரித்துச் சென்றான். தாங்கள், வெளியில் கவலையடைந்தவராய்த் தோன்றினாலும் ராவண வதத்திற்குக் காரணம் கிடைத்ததால் சந்தோஷமடைந்தீர்கள். 

भूयस्तन्वीं विचिन्वन्नहृत दशमुखस्त्वद्वधूं मद्वधेने-
त्युक्त्वा याते जटायौ दिवमथ सुहृद: प्रातनो: प्रेतकार्यम् ।
गृह्णानं तं कबन्धं जघनिथ शबरीं प्रेक्ष्य पम्पातटे त्वं
सम्प्राप्तो वातसूनुं भृशमुदितमना: पाहि वातालयेश ॥१०॥

இந்த ஸ்லோகத்தைப் படிப்போரின் கவலை நீங்கும்.
பூ₄யஸ்தந்வீம் விசிந்வந்நஹ்ருத த₃ஶமுக₂ஸ்த்வத்₃வதூ₄ம் மத்₃வதே₄நே-
த்யுக்த்வா யாதே ஜடாயௌ தி₃வமத₂ ஸுஹ்ருத₃: ப்ராதநோ: ப்ரேதகார்யம் |
க்₃ருஹ்ணாநம் தம் கப₃ந்த₄ம் ஜக₄நித₂ ஶப₃ரீம் ப்ரேக்ஷ்ய பம்பாதடே த்வம்
ஸம்ப்ராப்தோ வாதஸூநும் ப்₄ருஶமுதி₃தமநா: பாஹி வாதாலயேஶ || 10||

10. சீதையைத் தேடிச் சென்றீர்கள். வழியில் ஜடாயுவைக் கண்டீர்கள். சீதையை அபகரித்தவன் ராவணன் என்ற செய்தியைச் சொன்னபின் ஜடாயுவின் உயிர் பிரிந்தது. அவனுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்தீர்கள். தங்களைப் பிடித்த கபந்தனைக் கொன்றீர்கள். பம்பை நதிக் கரையில் சபரியைப் பார்த்து , பின்னர் அனுமனைக் கண்டு அளவற்ற ஆனந்தம் அடைந்தீர்கள். குருவாயூரப்பா! காக்க வேண்டும்.


1 comment:

  1. enter ramayanam in 20 slokas in dhasakam 34 & 35. thank you Shanthi. May Rama's blessings be with you. rgds sivan

    ReplyDelete