Friday, April 11, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 42

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 42, ஸ்ரீ நாராயணீயம் 42வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -42
சகடாசுர வதம்

कदापि जन्मर्क्षदिने तव प्रभो निमन्त्रितज्ञातिवधूमहीसुरा ।
महानसस्त्वां सविधे निधाय सा महानसादौ ववृते व्रजेश्वरी ॥१॥

கதா₃பி ஜந்மர்க்ஷதி₃நே தவ ப்ரபோ₄ நிமந்த்ரிதஜ்ஞாதிவதூ₄மஹீஸுரா |
மஹாநஸஸ்த்வாம் ஸவிதே₄ நிதா₄ய ஸா மஹாநஸாதௌ₃ வவ்ருதே வ்ரஜேஶ்வரீ || 1||

1. உமது பிறந்தநாள் வந்தது. அதைக் கொண்டாட, பெரியோர்களும், உறவினர்களும் அழைக்கப்பட்டார்கள். யசோதை, தங்களுக்கு ஒரு பெரிய வண்டியின் அடியில் தொட்டில் கட்டி, அதில் தங்களைப் படுக்க வைத்து, சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.

ततो भवत्त्राणनियुक्तबालकप्रभीतिसङ्क्रन्दनसङ्कुलारवै: ।
विमिश्रमश्रावि भवत्समीपत: परिस्फुटद्दारुचटच्चटारव: ॥२॥

ததோ ப₄வத்த்ராணநியுக்தபா₃லகப்ரபீ₄திஸங்க்ரந்த₃நஸங்குலாரவை: |
விமிஶ்ரமஶ்ராவி ப₄வத்ஸமீபத: பரிஸ்பு₂டத்₃தா₃ருசடச்சடாரவ: || 2||

2. அப்போது, தங்கள் அருகே மரங்கள் முறியும் சப்தமும், தங்களைப் பார்த்துக் கொள்ள நியமித்திருந்த இடைச்சிறுவர்களின் கூக்குரலும் கேட்டது. 

ततस्तदाकर्णनसम्भ्रमश्रमप्रकम्पिवक्षोजभरा व्रजाङ्गना: ।
भवन्तमन्तर्ददृशुस्समन्ततो विनिष्पतद्दारुणदारुमध्यगम् ॥३॥

ததஸ்ததா₃கர்ணநஸம்ப்₄ரமஶ்ரமப்ரகம்பிவக்ஷோஜப₄ரா வ்ரஜாங்க₃நா: |
ப₄வந்தமந்தர்த₃த்₃ருஶுஸ்ஸமந்ததோ விநிஷ்பதத்₃தா₃ருணதா₃ருமத்₄யக₃ம் || 3||

3. அந்தப் பெருஞ்சத்தத்தைக் கேட்டு, இடைப்பெண்கள் உடல் குலுங்க ஓடி வந்தனர். அங்கே, வண்டி முறிந்து கிடக்க, அதன் நடுவே தங்களைக் கண்டனர்.

शिशोरहो किं किमभूदिति द्रुतं प्रधाव्य नन्द: पशुपाश्च भूसुरा: ।
भवन्तमालोक्य यशोदया धृतं समाश्वसन्नश्रुजलार्द्रलोचना: ॥४॥

ஶிஶோரஹோ கிம் கிமபூ₄தி₃தி த்₃ருதம் ப்ரதா₄வ்ய நந்த₃: பஶுபாஶ்ச பூ₄ஸுரா: |
ப₄வந்தமாலோக்ய யஶோத₃யா த்₄ருதம் மாஶ்வஸந்நஶ்ருஜலார்த்₃ரலோசநா: || 4||

4. பெரியோர்களும், இடையர்களும், நந்தகோபனும், உமக்கு என்ன நேர்ந்ததோ என்று பயந்து தங்கள் அருகே ஓடி வந்தனர். யசோதை தங்களைத் தூக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து சமாதானம் அடைந்தனர்.

कस्को नु कौतस्कुत एष विस्मयो विशङ्कटं यच्छकटं विपाटितम् ।
न कारणं किञ्चिदिहेति ते स्थिता: स्वनासिकादत्तकरास्त्वदीक्षका: ॥५॥

கஸ்கோ நு கௌதஸ்குத ஏஷ விஸ்மயோ விஶங்கடம் யச்ச₂கடம் விபாடிதம் |
ந காரணம் கிஞ்சிதி₃ஹேதி தே ஸ்தி₂தா: வநாஸிகாத₃த்தகராஸ்த்வதீ₃க்ஷகா: || 5||

5. என்ன ஆச்சர்யம்? இந்த வண்டி எப்படி முறிந்தது? ஒன்றும் புரியவில்லையே! என்று அதிசயித்தனர். 

कुमारकस्यास्य पयोधरार्थिन: प्ररोदने लोलपदाम्बुजाहतम् ।
मया मया दृष्टमनो विपर्यगादितीश ते पालकबालका जगु: ॥६॥

குமாரகஸ்யாஸ்ய பயோத₄ரார்தி₂ந: ப்ரரோத₃நே லோலபதா₃ம்பு₃ஜாஹதம் |
மயா மயா த்₃ருஷ்டமநோ விபர்யகா₃தி₃தீஶ தே பாலகபா₃லகா ஜகு₃: || 6||

6. தங்களைப் பார்த்துக் கொள்ள நியமித்திருந்த இடைச்சிறுவர்கள், “இக்குழந்தை பால் சாப்பிட அழுதுகொண்டு காலை உதைத்துக் கொண்டது, அதன் கால் பட்டு இந்த வண்டி உடைந்தது, நாங்கள் பார்த்தோம்” என்று கூறினார்கள்.

भिया तदा किञ्चिदजानतामिदं कुमारकाणामतिदुर्घटं वच: ।
भवत्प्रभावाविदुरैरितीरितं मनागिवाशङ्क्यत दृष्टपूतनै: ॥७॥

பி₄யா ததா₃ கிஞ்சித₃ஜாநதாமித₃ம் குமாரகாணாமதிது₃ர்க₄டம் வச: |
ப₄வத்ப்ரபா₄வாவிது₃ரைரிதீரிதம் மநாகி₃வாஶங்க்யத த்₃ருஷ்டபூதநை: || 7||

7. தங்கள் பெருமையை அறியாத சில இடையர்கள் அதை நம்ப மறுத்தனர். பூதனையின் முடிவை நேரில் கண்டிருந்த சிலர் அப்படியும் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

प्रवालताम्रं किमिदं पदं क्षतं सरोजरम्यौ नु करौ विरोजितौ।
इति प्रसर्पत्करुणातरङ्गितास्त्वदङ्गमापस्पृशुरङ्गनाजना: ॥८॥

ப்ரவாலதாம்ரம் கிமித₃ம் பத₃ம் க்ஷதம் ஸரோஜரம்யௌ நு கரௌ விரோஜிதௌ|
இதி ப்ரஸர்பத்கருணாதரங்கி₃தாஸ்த்வத₃ங்க₃மாபஸ்ப்ருஶுரங்க₃நாஜநா: || 8||

8. பிஞ்சுப் பாதங்களில் காயம் பட்டதா? தாமரைக் கைகளில் அடி பட்டதா? என்று இடைப்பெண்கள் தங்களைத் தடவிப் பார்த்தனர்.

अये सुतं देहि जगत्पते: कृपातरङ्गपातात्परिपातमद्य मे ।
इति स्म सङ्गृह्य पिता त्वदङ्गकं मुहुर्मुहु: श्लिष्यति जातकण्टक: ॥९॥

அயே ஸுதம் தே₃ஹி ஜக₃த்பதே: க்ருபாதரங்க₃பாதாத்பரிபாதமத்₃ய மே | 
இதி ஸ்ம ஸங்க்₃ருஹ்ய பிதா த்வத₃ங்க₃கம் முஹுர்முஹு: ஶ்லிஷ்யதி ஜாதகண்டக: || 9||

9. உலகத்தைக் காக்கும் ஹரியால் என் குழந்தை காக்கப்பட்டது என்று கூறிய நந்தகோபர், மயிர்க்கூச்சலுடன் தங்களைத் தூக்கித் தழுவிக் கொண்டார்.

अनोनिलीन: किल हन्तुमागत: सुरारिरेवं भवता विहिंसित: ।
रजोऽपि नो दृष्टममुष्य तत्कथं स शुद्धसत्त्वे त्वयि लीनवान् ध्रुवम् ॥१०॥

அநோநிலீந: கில ஹந்துமாக₃த: ஸுராரிரேவம் ப₄வதா விஹிம்ஸித: |
ரஜோ(அ)பி நோ த்₃ருஷ்டமமுஷ்ய தத்கத₂ம் ஸ ஶுத்₃த₄ஸத்த்வே த்வயி லீநவாந் த்₄ருவம் || 10||

10. வண்டியின் உருவில் வந்த அசுரனைத் தாங்கள் வதம் செய்தீர்கள். அதனால் அவன் ஸத்வவடிவான தங்களிடம் ஐக்யமடைந்துவிட்டான். அவனுடைய உடலின் சிறு பாகம்கூட அங்கு காணப்படவில்லை. 

प्रपूजितैस्तत्र ततो द्विजातिभिर्विशेषतो लम्भितमङ्गलाशिष: ।
व्रजं निजैर्बाल्यरसैर्विमोहयन् मरुत्पुराधीश रुजां जहीहि मे ॥११॥

ப்ரபூஜிதைஸ்தத்ர ததோ த்₃விஜாதிபி₄ர்விஶேஷதோ லம்பி₄தமங்க₃லாஶிஷ: |
வ்ரஜம் நிஜைர்பா₃ல்யரஸைர்விமோஹயந் மருத்புராதீ₄ஶ ருஜாம் ஜஹீஹி மே || 11||

11. குருவாயூரப்பா! பிறகு வேதமறிந்தவர்கள் தங்களை ஆசீர்வதித்தார்கள். தங்கள் லீலைகளால் கோகுலத்தை மகிழ்வித்தீர்கள். தாங்கள் என்னுடைய நோயைப் போக்கிக் காக்க வேண்டும். 


No comments:

Post a Comment