Sunday, April 20, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 51

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 51, ஸ்ரீ நாராயணீயம் 51வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -51
அகாசுர வதம்

कदाचन व्रजशिशुभि: समं भवान्
वनाशने विहितमति: प्रगेतराम् ।
समावृतो बहुतरवत्समण्डलै:
सतेमनैर्निरगमदीश जेमनै: ॥१॥

கதா₃சந வ்ரஜஶிஶுபி₄: ஸமம் ப₄வாந்
வநாஶநே விஹிதமதி: ப்ரகே₃தராம் |
ஸமாவ்ருதோ ப₃ஹுதரவத்ஸமண்ட₃லை:
ஸதேமநைர்நிரக₃மதீ₃ஶ ஜேமநை: || 1||

1. ஒரு முறை, ஆயர் சிறுவர்களுடன் வனபோஜனம் செய்ய விருப்பம் கொண்டு, காய், கறி, குழம்பு முதலியவைகளுடன் கூடிய அன்னத்தை எடுத்துக்கொண்டு, கன்றுகளுடனும், கோபர்களுடனும் காட்டுக்குச் சென்றீர்கள்.

विनिर्यतस्तव चरणाम्बुजद्वया-
दुदञ्चितं त्रिभुवनपावनं रज: ।
महर्षय: पुलकधरै: कलेबरै-
रुदूहिरे धृतभवदीक्षणोत्सवा: ॥२॥

விநிர்யதஸ்தவ சரணாம்பு₃ஜத்₃வயா-
து₃த₃ஞ்சிதம் த்ரிபு₄வநபாவநம் ரஜ: |
மஹர்ஷய: புலகத₄ரை: கலேப₃ரை-
ருதூ₃ஹிரே த்₄ருதப₄வதீ₃க்ஷணோத்ஸவா: || 2||

2. தாங்கள் நடந்தபோது, தங்கள் தாமரைப் பாதங்கள் பட்டு தூசி கிளம்பியது. மூவுலகங்களையும் பாவனமாக்கும் அந்த தூசியை, முனிவர்கள் மயிர்க்கூச்சலுடன் தங்கள் தேகத்தில் ஏற்றார்கள். 

प्रचारयत्यविरलशाद्वले तले
पशून् विभो भवति समं कुमारकै: ।
अघासुरो न्यरुणदघाय वर्तनी
भयानक: सपदि शयानकाकृति: ॥३॥

ப்ரசாரயத்யவிரலஶாத்₃வலே தலே
பஶூந் விபோ₄ ப₄வதி ஸமம் குமாரகை: |
அகா₄ஸுரோ ந்யருணத₃கா₄ய வர்தநீ
ப₄யாநக: ஸபதி₃ ஶயாநகாக்ருதி: || 3||

3. கோபகுமாரர்களுடன், புல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தீர்கள். அப்போது, அகன் என்ற அசுரன், தங்களுக்குத் தீமை நினைத்து, மலைப்பாம்பின் உருவெடுத்து வழிமறித்தான். 

महाचलप्रतिमतनोर्गुहानिभ-
प्रसारितप्रथितमुखस्य कानने ।
मुखोदरं विहरणकौतुकाद्गता:
कुमारका: किमपि विदूरगे त्वयि ॥४॥

மஹாசலப்ரதிமதநோர்கு₃ஹாநிப₄-
ப்ரஸாரிதப்ரதி₂தமுக₂ஸ்ய காநநே |
முகோ₂த₃ரம் விஹரணகௌதுகாத்₃க₃தா:
குமாரகா: கிமபி விதூ₃ரகே₃ த்வயி || 4||

4. அப்பாம்பு பெரிய மலை போலவும், திறந்திருந்த அதன் வாய் பெரிய குகை போலவும் தோற்றமளித்தது. ஆயர்சிறுவர்கள் அதை நிஜமான குகையென்று நினைத்து அதன் வாயில் புகுந்தனர்.

प्रमादत: प्रविशति पन्नगोदरं
क्वथत्तनौ पशुपकुले सवात्सके ।
विदन्निदं त्वमपि विवेशिथ प्रभो
सुहृज्जनं विशरणमाशु रक्षितुम् ॥५॥

ப்ரமாத₃த: ப்ரவிஶதி பந்நகோ₃த₃ரம்
க்வத₂த்தநௌ பஶுபகுலே ஸவாத்ஸகே |
வித₃ந்நித₃ம் த்வமபி விவேஶித₂ ப்ரபோ₄
ஸுஹ்ருஜ்ஜநம் விஶரணமாஶு ரக்ஷிதும் || 5||

5. தவறுதலாகப் புகுந்த அவர்கள் மிக்க தாபத்தை அடைந்தனர். இதையறிந்த நீர், ஆதரவற்ற நண்பர்களைக் காக்க அப்பாம்பின் வாயில் நுழைந்தீர். 

गलोदरे विपुलितवर्ष्मणा त्वया
महोरगे लुठति निरुद्धमारुते ।
द्रुतं भवान् विदलितकण्ठमण्डलो
विमोचयन् पशुपपशून् विनिर्ययौ ॥६॥

க₃லோத₃ரே விபுலிதவர்ஷ்மணா த்வயா
மஹோரகே₃ லுட₂தி நிருத்₃த₄மாருதே |
த்₃ருதம் ப₄வாந் வித₃லிதகண்ட₂மண்ட₃லோ
விமோசயந் பஶுபபஶூந் விநிர்யயௌ || 6||

6. அதன் வாயில் இருந்துகொண்டு தங்கள் உருவத்தை மிகப் பெரியதாகச் செய்துகொண்டீர்கள். அந்தப் பாம்பு மூச்சு விட முடியாமல் புரண்டது. உடனே, அதனுடைய கழுத்தைக் கிழித்துக்கொண்டு, கோபகுமாரர்களையும், மாடு கன்றுகளையும் பிழைப்பித்து வெளியில் வந்தீர்கள். 

क्षणं दिवि त्वदुपगमार्थमास्थितं
महासुरप्रभवमहो महो महत् ।
विनिर्गते त्वयि तु निलीनमञ्जसा
नभ:स्थले ननृतुरथो जगु: सुरा: ॥७॥

க்ஷணம் தி₃வி த்வது₃பக₃மார்த₂மாஸ்தி₂தம்
மஹாஸுரப்ரப₄வமஹோ மஹோ மஹத் |
விநிர்க₃தே த்வயி து நிலீநமஞ்ஜஸா
நப₄:ஸ்த₂லே நந்ருதுரதோ₂ ஜகு₃: ஸுரா: || 7||

7. அகாசுரனுடைய உடலிலிருந்து புறப்பட்ட ஒளி, வானில் காத்திருந்து, தாங்கள் வெளியே வந்ததும் தங்களுடன் கலந்து மறைந்தது. ஆச்சர்யம்! தேவர்கள் தங்கள் புகழ் பாடி ஆடினார்கள். 

सविस्मयै: कमलभवादिभि: सुरै-
रनुद्रुतस्तदनु गत: कुमारकै: ।
दिने पुनस्तरुणदशामुपेयुषि
स्वकैर्भवानतनुत भोजनोत्सवम् ॥८॥

ஸவிஸ்மயை: கமலப₄வாதி₃பி₄: ஸுரை-
ரநுத்₃ருதஸ்தத₃நு க₃த: குமாரகை: |
தி₃நே புநஸ்தருணத₃ஶாமுபேயுஷி
ஸ்வகைர்ப₄வாநதநுத போ₄ஜநோத்ஸவம் || 8||

8. பிறகு, இடைச்சிறுவர்களுடன் உச்சிப்பொழுதில் வனபோஜனம் செய்தீர்கள். அதைக் கண்டு பிரமனும், தேவர்களும் ஆச்சர்யம் அடைந்தனர்.

विषाणिकामपि मुरलीं नितम्बके
निवेशयन् कबलधर: कराम्बुजे ।
प्रहासयन् कलवचनै: कुमारकान्
बुभोजिथ त्रिदशगणैर्मुदा नुत: ॥९॥

விஷாணிகாமபி முரலீம் நிதம்ப₃கே
நிவேஶயந் கப₃லத₄ர: கராம்பு₃ஜே |
ப்ரஹாஸயந் கலவசநை: குமாரகாந்
பு₃போ₄ஜித₂ த்ரித₃ஶக₃ணைர்முதா₃ நுத: || 9||

9. கொம்பையும், புல்லாங்குழலையும் இடுப்பில் சொருகிக்கொண்டு, கையில் அன்னத்துடன், வேடிக்கையாகப் பேசி, சிறுவர்களைச் சிரிக்கச் செய்து கொண்டு, மகிழ்ச்சியுடன் உணவு உண்டீர். தேவர்கள் தங்களைத் துதித்தனர். 

सुखाशनं त्विह तव गोपमण्डले
मखाशनात् प्रियमिव देवमण्डले ।
इति स्तुतस्त्रिदशवरैर्जगत्पते
मरुत्पुरीनिलय गदात् प्रपाहि माम् ॥१०॥

ஸுகா₂ஶநம் த்விஹ தவ கோ₃பமண்ட₃லே
மகா₂ஶநாத் ப்ரியமிவ தே₃வமண்ட₃லே |
இதி ஸ்துதஸ்த்ரித₃ஶவரைர்ஜக₃த்பதே
மருத்புரீநிலய க₃தா₃த் ப்ரபாஹி மாம் || 10||

10. குருவாயூரப்பா! தேவர்களுடன் யாகத்தில் ஹவிர்பாகம் சாப்பிடுவதைவிட, இங்கு இடைச்சிறுவர்களோடு உண்பதில் ஆனந்தம் அடைகிறீர்கள் என்று தேவர்கள் கூறி துதித்தனர். உலகிற்கெல்லாம் நாயகனே! என் வியாதிகளைப் போக்கி என்னைக் காப்பாற்ற வேண்டும். 

No comments:

Post a Comment