Thursday, May 1, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 62

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 62, ஸ்ரீ நாராயணீயம் 62வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -62
கோவர்த்தன மலை வழிபாடு

कदाचिद्गोपालान् विहितमखसम्भारविभवान्
निरीक्ष्य त्वं शौरे मघवमदमुद्ध्वंसितुमना: ।
विजानन्नप्येतान् विनयमृदु नन्दादिपशुपा-
नपृच्छ: को वाऽयं जनक भवतामुद्यम इति ॥१॥

கதா₃சித்₃கோ₃பாலாந் விஹிதமக₂ஸம்பா₄ரவிப₄வாந்
நிரீக்ஷ்ய த்வம் ஶௌரே மக₄வமத₃முத்₃த்₄வம்ஸிதுமநா: |
விஜாநந்நப்யேதாந் விநயம்ருது₃ நந்தா₃தி₃பஶுபா-
நப்ருச்ச₂: கோ வா(அ)யம் ஜநக ப₄வதாமுத்₃யம இதி || 1||

1. ஒரு முறை, இடையர்கள் இந்திரனைப் பூஜிக்க, பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தார்கள். தாங்கள் இந்திரனின் கர்வத்தை அடக்க நினைத்தீர்கள். தங்கள் தந்தையிடம் இந்த ஏற்பாடுகள் எதற்கு என்று அறியாதவர் போல் கேட்டீர்கள்.

बभाषे नन्दस्त्वां सुत ननु विधेयो मघवतो
मखो वर्षे वर्षे सुखयति स वर्षेण पृथिवीम् ।
नृणां वर्षायत्तं निखिलमुपजीव्यं महितले
विशेषादस्माकं तृणसलिलजीवा हि पशव: ॥२॥

ப₃பா₄ஷே நந்த₃ஸ்த்வாம் ஸுத நநு விதே₄யோ மக₄வதோ
மகோ₂ வர்ஷே வர்ஷே ஸுக₂யதி ஸ வர்ஷேண ப்ருதி₂வீம் |
ந்ருணாம் வர்ஷாயத்தம் நிகி₂லமுபஜீவ்யம் மஹிதலே
விஶேஷாத₃ஸ்மாகம் த்ருணஸலிலஜீவா ஹி பஶவ: || 2||

2. நந்தனும், “மகனே! இந்திரன், மழை பொழியச் செய்து நம் பூமியைச் செழிப்பாக வைக்கிறார். அதனால் அவருக்கு ஒவ்வொரு வருடமும் பூஜை செய்ய வேண்டும். அனைவரின் பிழைப்பும் மழை மூலம் ஏற்படுகிறது. பசுக்களும் நீரையும் புல்லையும் நம்பி இருக்கின்றன” என்று கூறினார்.

इति श्रुत्वा वाचं पितुरयि भवानाह सरसं
धिगेतन्नो सत्यं मघवजनिता वृष्टिरिति यत् ।
अदृष्टं जीवानां सृजति खलु वृष्टिं समुचितां
महारण्ये वृक्षा: किमिव बलिमिन्द्राय ददते ॥३॥

இதி ஶ்ருத்வா வாசம் பிதுரயி ப₄வாநாஹ ஸரஸம்
தி₄கே₃தந்நோ ஸத்யம் மக₄வஜநிதா வ்ருஷ்டிரிதி யத் |
அத்₃ருஷ்டம் ஜீவாநாம் ஸ்ருஜதி க₂லு வ்ருஷ்டிம் ஸமுசிதாம்
மஹாரண்யே வ்ருக்ஷா: கிமிவ ப₃லிமிந்த்₃ராய த₃த₃தே || 3||

3. தந்தையின் சொல்லைக் கேட்டு, “இந்திரனால் மழை கிடைக்கிறது என்பது உண்மையல்ல. நாம் முன் ஜன்மத்தில் செய்த தர்மத்தால் மழை பெய்கிறது. காட்டில் உள்ள மரங்கள் இந்திரனுக்கு என்ன பூஜை செய்கின்றன?”  என்று சாமர்த்தியமாக பதில் கூறினீர்.

इदं तावत् सत्यं यदिह पशवो न: कुलधनं
तदाजीव्यायासौ बलिरचलभर्त्रे समुचित: ।
सुरेभ्योऽप्युत्कृष्टा ननु धरणिदेवा: क्षितितले
ततस्तेऽप्याराध्या इति जगदिथ त्वं निजजनान् ॥४॥

இத₃ம் தாவத் ஸத்யம் யதி₃ஹ பஶவோ ந: குலத₄நம்
ததா₃ஜீவ்யாயாஸௌ ப₃லிரசலப₄ர்த்ரே ஸமுசித: |
ஸுரேப்₄யோ(அ)ப்யுத்க்ருஷ்டா நநு த₄ரணிதே₃வா: க்ஷிதிதலே
ததஸ்தே(அ)ப்யாராத்₄யா இதி ஜக₃தி₃த₂ த்வம் நிஜஜநாந் || 4||

4. இந்தப் பசுக்கள் நம் இடையர்களின் சொத்து. அவைகளுக்குப் புல்லையும், நீரையும் கொடுப்பது கோவர்த்தன மலை. அதனால், கோவர்த்தன மலைக்கும், தேவர்களைவிடச் சிறந்த முனிவர்களுக்கும் பூஜை செய்ய வேண்டும் என்று கூறினீர்.

भवद्वाचं श्रुत्वा बहुमतियुतास्तेऽपि पशुपा:
द्विजेन्द्रानर्चन्तो बलिमददुरुच्चै: क्षितिभृते ।
व्यधु: प्रादक्षिण्यं सुभृशमनमन्नादरयुता-
स्त्वमादश्शैलात्मा बलिमखिलमाभीरपुरत: ॥५॥

ப₄வத்₃வாசம் ஶ்ருத்வா ப₃ஹுமதியுதாஸ்தே(அ)பி பஶுபா:
த்₃விஜேந்த்₃ராநர்சந்தோ ப₃லிமத₃து₃ருச்சை: க்ஷிதிப்₄ருதே |
வ்யது₄: ப்ராத₃க்ஷிண்யம் ஸுப்₄ருஶமநமந்நாத₃ரயுதா-
ஸ்த்வமாத₃ஶ்ஶைலாத்மா ப₃லிமகி₂லமாபீ₄ரபுரத: || 5||

5. அதைக் கேட்ட இடையர்கள், முனிவர்களையும், கோவர்த்தன மலையையும் பூஜித்தனர். பிறகு மலையை வலம் வந்து நமஸ்கரித்தனர். அனைத்து பூஜைகளையும் தாங்களே மலை வடிவில் பெற்றுக் கொண்டீர்.

अवोचश्चैवं तान् किमिह वितथं मे निगदितं
गिरीन्द्रो नन्वेष स्वबलिमुपभुङ्क्ते स्ववपुषा ।
अयं गोत्रो गोत्रद्विषि च कुपिते रक्षितुमलं
समस्तानित्युक्ता जहृषुरखिला गोकुलजुष: ॥६॥

அவோசஶ்சைவம் தாந் கிமிஹ விதத₂ம் மே நிக₃தி₃தம்
கி₃ரீந்த்₃ரோ நந்வேஷ ஸ்வப₃லிமுபபு₄ங்க்தே ஸ்வவபுஷா |
அயம் கோ₃த்ரோ கோ₃த்ரத்₃விஷி ச குபிதே ரக்ஷிதுமலம்
ஸமஸ்தாநித்யுக்தா ஜஹ்ருஷுரகி₂லா கோ₃குலஜுஷ: || 6||

6. இடையர்களிடம், “நான் சொன்னதுபோல் இம்மலை பூஜையை ஏற்றுக்கொண்டது. அதனால் இந்திரன் கோபித்துக் கொண்டாலும் இம்மலையே நம் எல்லோரையும் காக்கும்” என்று கூறினீர்கள்.

परिप्रीता याता: खलु भवदुपेता व्रजजुषो
व्रजं यावत्तावन्निजमखविभङ्गं निशमयन् ।
भवन्तं जानन्नप्यधिकरजसाऽऽक्रान्तहृदयो
न सेहे देवेन्द्रस्त्वदुपरचितात्मोन्नतिरपि ॥७॥

பரிப்ரீதா யாதா: க₂லு ப₄வது₃பேதா வ்ரஜஜுஷோ
வ்ரஜம் யாவத்தாவந்நிஜமக₂விப₄ங்க₃ம் நிஶமயந் |
ப₄வந்தம் ஜாநந்நப்யதி₄கரஜஸா(அ)(அ)க்ராந்தஹ்ருத₃யோ
ந ஸேஹே தே₃வேந்த்₃ரஸ்த்வது₃பரசிதாத்மோந்நதிரபி || 7||

7. அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு சென்றனர். தனக்குச் சேர வேண்டிய பூஜையில் இடையூறு ஏற்பட்டதைக் கேட்ட இந்திரன் கோபம் கொண்டான். தங்களை பற்றியும், தங்களால் கிடைத்த பதவியைப் பற்றியும் அறிந்திருந்தும், மிகுந்த அகங்காரத்தால் கோபமடைந்தான்.

मनुष्यत्वं यातो मधुभिदपि देवेष्वविनयं
विधत्ते चेन्नष्टस्त्रिदशसदसां कोऽपि महिमा ।
ततश्च ध्वंसिष्ये पशुपहतकस्य श्रियमिति
प्रवृत्तस्त्वां जेतुं स किल मघवा दुर्मदनिधि: ॥८॥

மநுஷ்யத்வம் யாதோ மது₄பி₄த₃பி தே₃வேஷ்வவிநயம்
வித₄த்தே சேந்நஷ்டஸ்த்ரித₃ஶஸத₃ஸாம் கோ(அ)பி மஹிமா |
ததஶ்ச த்₄வம்ஸிஷ்யே பஶுபஹதகஸ்ய ஶ்ரியமிதி
ப்ரவ்ருத்தஸ்த்வாம் ஜேதும் ஸ கில மக₄வா து₃ர்மத₃நிதி₄: || 8||

8. “நாராயணனே மானுட அவதாரம் எடுத்து இவ்வாறு செய்வது தேவர்களுக்கு ஒரு குறையல்லவா? இடையர்களின் சொத்துக்களை அழித்து நாசம் செய்கிறேன்” என்று இந்திரன் ஆர்ப்பரித்தான்.

त्वदावासं हन्तुं प्रलयजलदानम्बरभुवि
प्रहिण्वन् बिभ्राण; कुलिशमयमभ्रेभगमन: ।
प्रतस्थेऽन्यैरन्तर्दहनमरुदाद्यैविंहसितो
भवन्माया नैव त्रिभुवनपते मोहयति कम् ॥९॥

த்வதா₃வாஸம் ஹந்தும் ப்ரலயஜலதா₃நம்ப₃ரபு₄வி
ப்ரஹிண்வந் பி₃ப்₄ராண; குலிஶமயமப்₄ரேப₄க₃மந: |
ப்ரதஸ்தே₂(அ)ந்யைரந்தர்த₃ஹநமருதா₃த்₃யைவிம்ஹஸிதோ
ப₄வந்மாயா நைவ த்ரிபு₄வநபதே மோஹயதி கம் || 9||

9. ஐராவதம் என்ற தன் யானையின்மீது ஏறிக்கொண்டு, வஜ்ராயுதத்தை எடுத்துக்கொண்டு, பிரளயகாலத்து மேகங்களை உருவாக்கி, இடையர்களின் இருப்பிடத்தை அழிக்கப் புறப்பட்டான். பின்தொடர்ந்த அக்னி, வாயு முதலிய மற்ற தேவர்கள் மனதிற்குள் பரிகசித்தார்கள். மூவுலகிற்கும் நாயகனே! உமது மாயையை யார்தான் வெல்ல முடியும்?

सुरेन्द्र: क्रुद्धश्चेत् द्विजकरुणया शैलकृपयाऽ-
प्यनातङ्कोऽस्माकं नियत इति विश्वास्य पशुपान् ।
अहो किन्नायातो गिरिभिदिति सञ्चिन्त्य निवसन्
मरुद्गेहाधीश प्रणुद मुरवैरिन् मम गदान् ॥१०॥

ஸுரேந்த்₃ர: க்ருத்₃த₄ஶ்சேத் த்₃விஜகருணயா ஶைலக்ருபயா(அ)-
ப்யநாதங்கோ(அ)ஸ்மாகம் நியத இதி விஶ்வாஸ்ய பஶுபாந் |
அஹோ கிந்நாயாதோ கி₃ரிபி₄தி₃தி ஸஞ்சிந்த்ய நிவஸந்
மருத்₃கே₃ஹாதீ₄ஶ ப்ரணுத₃ முரவைரிந் மம க₃தா₃ந் || 10||

10. இந்திரனால் நமக்கு ஒரு கெடுதலும் நேராது. முனிவர்களும், கோவர்த்தன மலையும் நிச்சயம் நம்மைக் காப்பார்கள் என்று இடையர்களுக்கு சமாதானம் கூறினீர். இந்திரன் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தீர். முரனைக் கொன்றவனே! என் நோய்களைப் போக்கிக் காக்க வேண்டும்.

No comments:

Post a Comment