Friday, May 2, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 63

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 63, ஸ்ரீ நாராயணீயம் 63வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -63
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல்

ददृशिरे किल तत्क्षणमक्षत-
स्तनितजृम्भितकम्पितदिक्तटा: ।
सुषमया भवदङ्गतुलां गता
व्रजपदोपरि वारिधरास्त्वया ॥१॥

த₃த்₃ருஶிரே கில தத்க்ஷணமக்ஷத-
ஸ்தநிதஜ்ரும்பி₄தகம்பிததி₃க்தடா: |
ஸுஷமயா ப₄வத₃ங்க₃துலாம் க₃தா
வ்ரஜபதோ₃பரி வாரித₄ராஸ்த்வயா || 1||

1. தங்களது திருமேனிக்கு ஒப்பான கார்மேகங்கள் வானத்தில் சூழ்ந்தன. இடிமுழக்கம் அனைவரையும் நடுங்கச் செய்தது. அம்மேகங்களைப் பார்த்துத் தாங்கள் சந்தோஷித்தீர்கள்.

विपुलकरकमिश्रैस्तोयधारानिपातै-
र्दिशिदिशि पशुपानां मण्डले दण्ड्यमाने ।
कुपितहरिकृतान्न: पाहि पाहीति तेषां
वचनमजित श्रृण्वन् मा बिभीतेत्यभाणी: ॥२॥

விபுலகரகமிஶ்ரைஸ்தோயதா₄ராநிபாதை-
ர்தி₃ஶிதி₃ஶி பஶுபாநாம் மண்ட₃லே த₃ண்ட்₃யமாநே |
குபிதஹரிக்ருதாந்ந: பாஹி பாஹீதி தேஷாம்
வசநமஜித ஶ்ர்ருண்வந் மா பி₃பீ₄தேத்யபா₄ணீ: || 2||

2. பெரிய ஆலங்கட்டிகளுடன் கூடிய மழை பெய்தது. இடையர்கள் பயந்து, “கண்ணா, இந்திரனின் கோபத்திலிருந்து எங்களைக் காக்க வேண்டும்” என்று கூக்குரலிட்டனர். அதைக்கேட்ட தாங்கள் அஞ்சாதீர்கள் என்று சொன்னீர்கள்.

कुल इह खलु गोत्रो दैवतं गोत्रशत्रो-
र्विहतिमिह स रुन्ध्यात् को नु व: संशयोऽस्मिन् ।
इति सहसितवादी देव गोवर्द्धनाद्रिं
त्वरितमुदमुमूलो मूलतो बालदोर्भ्याम् ॥३॥

குல இஹ க₂லு கோ₃த்ரோ தை₃வதம் கோ₃த்ரஶத்ரோ-
ர்விஹதிமிஹ ஸ ருந்த்₄யாத் கோ நு வ: ஸம்ஶயோ(அ)ஸ்மிந் |
இதி ஸஹஸிதவாதீ₃ தே₃வ கோ₃வர்த்₃த₄நாத்₃ரிம்
த்வரிதமுத₃முமூலோ மூலதோ பா₃லதோ₃ர்ப்₄யாம் || 3||

3. இந்த கோவர்த்தனமலை இந்திரனின் கொடுமையிலிருந்து காத்து, அழிவை நிச்யம் தடுக்கும் என்று சொல்லிக்கொண்டே, புன்சிரிப்புடன் உமது இளம் கரங்களால் அம்மலையை வேரோடு பிடுங்கி இழுத்தீர்கள்.

तदनु गिरिवरस्य प्रोद्धृतस्यास्य तावत्
सिकतिलमृदुदेशे दूरतो वारितापे ।
परिकरपरिमिश्रान् धेनुगोपानधस्ता-
दुपनिदधदधत्था हस्तपद्मेन शैलम् ॥४॥

தத₃நு கி₃ரிவரஸ்ய ப்ரோத்₃த்₄ருதஸ்யாஸ்ய தாவத்
ஸிகதிலம்ருது₃தே₃ஶே தூ₃ரதோ வாரிதாபே |
பரிகரபரிமிஶ்ராந் தே₄நுகோ₃பாநத₄ஸ்தா-
து₃பநித₃த₄த₃த₄த்தா₂ ஹஸ்தபத்₃மேந ஶைலம் || 4||

4. தாமரைக் கரங்களால் மலையைக் குடைபோல உயரே தூக்கி, அதன் கீழ் இடையர்களின் உடைமைகளையும், பசுக்களையும், கோபர்களையும் இருக்கச் செய்தீர்கள்.

भवति विधृतशैले बालिकाभिर्वयस्यै-
रपि विहितविलासं केलिलापादिलोले ।
सविधमिलितधेनूरेकहस्तेन कण्डू-
यति सति पशुपालास्तोषमैषन्त सर्वे ॥५॥

ப₄வதி வித்₄ருதஶைலே பா₃லிகாபி₄ர்வயஸ்யை-
ரபி விஹிதவிலாஸம் கேலிலாபாதி₃லோலே |
ஸவித₄மிலிததே₄நூரேகஹஸ்தேந கண்டூ₃-
யதி ஸதி பஶுபாலாஸ்தோஷமைஷந்த ஸர்வே || 5||

5. ஒரு கையால் மலையை தூக்கிக் கொண்டும், மறு கையால் தங்கள் அருகே வந்த பசுக்களைச் சொறிந்து கொண்டும், நண்பர்களுடனும், கோபியருடனும் விளையாட்டாய்ப் பேசிக்கொண்டு மகிழ்ந்திருந்தீர்கள்.

अतिमहान् गिरिरेष तु वामके
करसरोरुहि तं धरते चिरम् ।
किमिदमद्भुतमद्रिबलं न्विति
त्वदवलोकिभिराकथि गोपकै: ॥६॥

அதிமஹாந் கி₃ரிரேஷ து வாமகே
கரஸரோருஹி தம் த₄ரதே சிரம் |
கிமித₃மத்₃பு₄தமத்₃ரிப₃லம் ந்விதி
த்வத₃வலோகிபி₄ராகதி₂ கோ₃பகை: || 6||

6. இடையர்கள், “இவ்வளவு பெரிய மலையைக் கண்ணன் சிறு கரங்களால் தூக்கிக்கொண்டிருக்கிறார். ஆச்சர்யம்! இது மலையின் பெருமையாய் இருக்குமோ?” என்று அறியாது கூறினார்கள்.

अहह धार्ष्ट्यममुष्य वटोर्गिरिं
व्यथितबाहुरसाववरोपयेत् ।
इति हरिस्त्वयि बद्धविगर्हणो
दिवससप्तकमुग्रमवर्षयत् ॥७॥

அஹஹ தா₄ர்ஷ்ட்யமமுஷ்ய வடோர்கி₃ரிம்
வ்யதி₂தபா₃ஹுரஸாவவரோபயேத் |
இதி ஹரிஸ்த்வயி ப₃த்₃த₄விக₃ர்ஹணோ
தி₃வஸஸப்தகமுக்₃ரமவர்ஷயத் || 7||

7. இந்திரன், “இச்சிறுவனுக்கு என்ன தைரியம்? சிறிது நேரத்தில் மலையைத் தூக்க முடியாமல், கீழே போட்டுவிடுவான்” என்று நினைத்து ஏழு நாட்கள் கடுமையாக மழை பொழியச் செய்தான்.

अचलति त्वयि देव पदात् पदं
गलितसर्वजले च घनोत्करे ।
अपहृते मरुता मरुतां पति-
स्त्वदभिशङ्कितधी: समुपाद्रवत् ॥८॥

அசலதி த்வயி தே₃வ பதா₃த் பத₃ம்
க₃லிதஸர்வஜலே ச க₄நோத்கரே |
அபஹ்ருதே மருதா மருதாம் பதி-
ஸ்த்வத₃பி₄ஶங்கிததீ₄: ஸமுபாத்₃ரவத் || 8||

8. தாங்கள் சிறிதும் நகரவில்லை. நீர் முழுவதையும் சொறிந்த மேகங்களைக் காற்று வெகுதூரம் தள்ளிச் சென்றது. இந்திரனும் பயந்து ஓடினான்.

शममुपेयुषि वर्षभरे तदा
पशुपधेनुकुले च विनिर्गते ।
भुवि विभो समुपाहितभूधर:
प्रमुदितै: पशुपै: परिरेभिषे ॥९॥

ஶமமுபேயுஷி வர்ஷப₄ரே ததா₃
பஶுபதே₄நுகுலே ச விநிர்க₃தே |
பு₄வி விபோ₄ ஸமுபாஹிதபூ₄த₄ர:
ப்ரமுதி₃தை: பஶுபை: பரிரேபி₄ஷே || 9||

9. மழை நின்றுவிட்டது. இடையர்களும், பசுக்களும் வெளியே வந்தார்கள். மலையை மீண்டும் அதன் இடத்திலேயே வைத்தீர்கள். சந்தோஷமடைந்த கோபர்கள் தங்களைக் கட்டித் தழுவினர்.

धरणिमेव पुरा धृतवानसि
क्षितिधरोद्धरणे तव क: श्रम: ।
इति नुतस्त्रिदशै: कमलापते
गुरुपुरालय पालय मां गदात् ॥१०॥

த₄ரணிமேவ புரா த்₄ருதவாநஸி
க்ஷிதித₄ரோத்₃த₄ரணே தவ க: ஶ்ரம: |
இதி நுதஸ்த்ரித₃ஶை: கமலாபதே
கு₃ருபுராலய பாலய மாம் க₃தா₃த் || 10||

10. லக்ஷ்மிநாதனே! வராக அவதாரத்தில் பூமியையே தூக்கிக்கொண்டிருந்த தங்களுக்கு, கோவர்த்தனமலையைத் தூக்குவதில் என்ன கஷ்டம்? என்று தேவர்கள் துதித்தனர். குருவாயூரப்பா! நோயிலிருந்து என்னைக் காத்து அருள வேண்டும்.

No comments:

Post a Comment