Wednesday, May 7, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 68

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 68, ஸ்ரீ நாராயணீயம் 68வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -68
கோபியர்கள் அளவற்ற மகிழ்ச்சி

இந்த தசகம் முழுவதும் (க்ருஷ்ணா) என்பதைச் சேர்த்தே சொல்ல வேண்டும். பாகவதத்திலுள்ள கோபிகா கீதம் போல் பாட வேண்டும். பட்டத்ரி இவ்வாறு சொல்லாவிட்டாலும் பக்தர்கள் 'க்ருஷ்ணா' என்பதைச் சேர்த்தே சொல்கிறார்கள்.

तव विलोकनाद्गोपिकाजना: प्रमदसङ्कुला: पङ्कजेक्षण ।
अमृतधारया संप्लुता इव स्तिमिततां दधुस्त्वत्पुरोगता: ॥१॥

தவ விலோகநாத்₃(க்ருஷ்ணா)கோ₃பிகாஜநா: 
ப்ரமத₃ஸங்குலா: (க்ருஷ்ணா)பங்கஜேக்ஷண |
அம்ருததா₄ரயா(க்ருஷ்ணா) ஸம்ப்லுதா இவ 
ஸ்திமிததாம் த₃து₄(க்ருஷ்ணா)ஸ்த்வத்புரோக₃தா: || 1||

1. தங்களை நேரில் கண்ட கோபியர்கள் அளவற்ற சந்தோஷத்தினால் திகைத்து நின்றனர். அமிர்தமழையால் நனைக்கப்பட்டவர்கள் போல் அசைவற்று நின்றனர்.

तदनु काचन त्वत्कराम्बुजं सपदि गृह्णती निर्विशङ्कितम् ।
घनपयोधरे सन्निधाय सा पुलकसंवृता तस्थुषी चिरम् ॥२॥

தத₃நு காசந(க்ருஷ்ணா) த்வத்கராம்பு₃ஜம் 
ஸபதி₃ க்₃ருஹ்ணதீ(க்ருஷ்ணா) நிர்விஶங்கிதம் |
க₄நபயோத₄ரே(க்ருஷ்ணா) ஸந்நிதா₄ய ஸா 
புலகஸம்வ்ருதா(க்ருஷ்ணா) தஸ்து₂ஷீ சிரம் || 2||

2. ஒரு கோபிகை, மயிர்க்கூச்சலுடன், உமது கையை எடுத்து, தனது மார்பில் வைத்துக்கொண்டு நின்றாள். 

तव विभोऽपरा कोमलं भुजं निजगलान्तरे पर्यवेष्टयत् ।
गलसमुद्गतं प्राणमारुतं प्रतिनिरुन्धतीवातिहर्षुला ॥३॥

தவ விபோ₄(அ)பரா(க்ருஷ்ணா) கோமலம் பு₄ஜம் 
நிஜக₃லாந்தரே(க்ருஷ்ணா) பர்யவேஷ்டயத் |
க₃லஸமுத்₃க₃தம்(க்ருஷ்ணா) ப்ராணமாருதம்
ப்ரதிநிருந்த₄தீவ(க்ருஷ்ணா)அதிஹர்ஷுலா || 3||

3. மற்றொருவள், உமது கையை எடுத்து, தன் மூச்சே நின்றுவிடும்படி தனது கழுத்தில் இறுகச் சுற்றிக் கொண்டாள்.

अपगतत्रपा कापि कामिनी तव मुखाम्बुजात् पूगचर्वितम् ।
प्रतिगृहय्य तद्वक्त्रपङ्कजे निदधती गता पूर्णकामताम् ॥४॥

அபக₃தத்ரபா(க்ருஷ்ணா) காபி காமிநீ 
தவ முகா₂ம்பு₃ஜாத்(க்ருஷ்ணா) பூக₃சர்விதம் |
ப்ரதிக்₃ருஹய்ய தத்₃(க்ருஷ்ணா)வக்த்ரபங்கஜே
நித₃த₄தீ க₃தா(க்ருஷ்ணா) பூர்ணகாமதாம் || 4||

4. இன்னொரு கோபிகை, வெட்கத்தை விட்டு, உமது வாயிலிருந்து தாம்பூலத்தைப் பெற்று, அதை உண்டு, அனைத்தையும் அடைந்து விட்டதாய் நினைத்தாள்.

विकरुणो वने संविहाय मामपगतोऽसि का त्वामिह स्पृशेत् ।
इति सरोषया तावदेकया सजललोचनं वीक्षितो भवान् ॥५॥

விகருணோ வநே(க்ருஷ்ணா) ஸம்விஹாய மாம்
அபக₃தோ(அ)ஸி கா(க்ருஷ்ணா) த்வாமிஹ ஸ்ப்ருஶேத் |
இதி ஸரோஷயா(க்ருஷ்ணா) தாவதே₃கயா 
ஸஜலலோசநம்(க்ருஷ்ணா) வீக்ஷிதோ ப₄வாந் || 5||

5. இரக்கமில்லாமல் என்னைக் காட்டில் விட்டுவிட்டுச் சென்ற உன்னை யாரும் தொடமாட்டார்கள் என்று ஒரு கோபிகை கண்ணில் நீர் வழிய கோபத்துடன் கூறினாள்.

इति मुदाऽऽकुलैर्वल्लवीजनै: सममुपागतो यामुने तटे ।
मृदुकुचाम्बरै: कल्पितासने घुसृणभासुरे पर्यशोभथा: ॥६॥

இதி முதா₃(அ)(அ)குலைர்(க்ருஷ்ணா)வல்லவீஜநை:
ஸமமுபாக₃தோ(க்ருஷ்ணா) யாமுநே தடே | 
ம்ருது₃குசாம்ப₃ரை: (க்ருஷ்ணா)கல்பிதாஸநே
கு₄ஸ்ருணபா₄ஸுரே(க்ருஷ்ணா) பர்யஶோப₄தா₂: || 6||

6. ஆனந்தப் பரவசர்களாகி அக்கோபியர்கள், யமுனைக்கரையில் தமது மேலாக்கினால் ஆசனம் செய்தார்கள். தாங்களும் அதில் அமர்ந்தீர்கள்.

कतिविधा कृपा केऽपि सर्वतो धृतदयोदया: केचिदाश्रिते ।
कतिचिदीदृशा मादृशेष्वपीत्यभिहितो भवान् वल्लवीजनै: ॥७॥

கதிவிதா₄ க்ருபா(க்ருஷ்ணா) கே(அ)பி ஸர்வதோ 
த்₄ருதத₃யோத₃யா: (க்ருஷ்ணா)கேசிதா₃ஶ்ரிதே |
கதிசிதீ₃த்₃ருஶா(க்ருஷ்ணா) மாத்₃ருஶேஷ்வபீதி
அபி₄ஹிதோ ப₄வாந்(க்ருஷ்ணா) வல்லவீஜநை: || 7||

7. கருணை எத்தனை விதம்? சிலர் அனைவரிடத்திலும், சிலர் தன்னை அண்டியவர்களிடத்திலும் கருணை காட்டுகிறார்கள். சிலர், வீடு வாசலை விட்டு அண்டியவர்களிடத்திலும்கூட கருணையற்று இருக்கிறார்கள் என்று உம்மைப் பார்த்து கோபியர் கூறினர்.

अयि कुमारिका नैव शङ्क्यतां कठिनता मयि प्रेमकातरे ।
मयि तु चेतसो वोऽनुवृत्तये कृतमिदं मयेत्यूचिवान् भवान् ॥८॥

அயி குமாரிகா(க்ருஷ்ணா) நைவ ஶங்க்யதாம் 
கடி₂நதா மயி(க்ருஷ்ணா) ப்ரேமகாதரே | 
மயி து சேதஸோ(க்ருஷ்ணா) வோ(அ)நுவ்ருத்தயே 
க்ருதமித₃ம் மயா(க்ருஷ்ணா)இத்யூசிவாந் ப₄வாந் || 8||

8. பெண்களே! கல்நெஞ்சம் படைத்தவன் என்று என்னை சந்தேகப்படாதீர்கள். உங்கள் அதிக அன்பினால் பயந்து, உங்களுடைய மனம் என்னையே நாடவேண்டும் என்று நான் மறைந்து சென்றேன் என்று அவர்களிடம் கூறினீர்கள்.

अयि निशम्यतां जीववल्लभा: प्रियतमो जनो नेदृशो मम ।
तदिह रम्यतां रम्ययामिनीष्वनुपरोधमित्यालपो विभो ॥९॥

அயி நிஶம்யதாம்(க்ருஷ்ணா) ஜீவவல்லபா₄: 
ப்ரியதமோ ஜன: (க்ருஷ்ணா) நேத்₃ருஶோ மம | 
ததி₃ஹ ரம்யதாம்(க்ருஷ்ணா) ரம்யயாமிநீஷு 
அநுபரோத₄மித்(க்ருஷ்ணா)ஆலபோ விபோ₄ || 9||

9. உயிரினும் மேலான கோபியர்களே! உங்களைவிட என்னிடம் அன்பு கொண்டவர் எவரும் கிடையாது. ஆகையால், நிலவொளி வீசும் இந்த இரவில், என்னுடன் தடையின்றி விளையாடுங்கள் என்று கூறினீர்.

इति गिराधिकं मोदमेदुरैर्व्रजवधूजनै: साकमारमन् ।
कलितकौतुको रासखेलने गुरुपुरीपते पाहि मां गदात् ॥१०॥

இதி கி₃ராதி₄கம்(க்ருஷ்ணா) மோத₃மேது₃ரை: 
வ்ரஜவதூ₄ஜநை: (க்ருஷ்ணா)ஸாகமாரமந் | 
கலிதகௌதுகோ(க்ருஷ்ணா) ராஸகே₂லநே 
கு₃ருபுரீபதே(க்ருஷ்ணா) பாஹி மாம் க₃தா₃த் || 10||

10. தங்கள் வார்த்தையால் மிகுந்த ஆனந்தம் அடைந்த கோபியர்களுடன் யமுனைக்கரையில் விளையாடினீர்கள். குருவாயூரப்பா! தாங்கள் என்னை நோய்க் கூட்டத்திலிருந்து காத்து அருள வேண்டும்.
 

No comments:

Post a Comment