Sunday, May 18, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 79

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 79, ஸ்ரீ நாராயணீயம் 79வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -79
ருக்மிணி கல்யாணம் 

बलसमेतबलानुगतो भवान् पुरमगाहत भीष्मकमानित: ।
द्विजसुतं त्वदुपागमवादिनं धृतरसा तरसा प्रणनाम सा ।।१॥

ப₃லஸமேதப₃லாநுக₃தோ ப₄வாந் புரமகா₃ஹத பீ₄ஷ்மகமாநித: |
த்₃விஜஸுதம் த்வது₃பாக₃மவாதி₃நம் த்₄ருதரஸா தரஸா ப்ரணநாம ஸா || 1||

1. தாங்கள் குண்டின தேசத்தை அடைந்தீர்கள். பலராமன் சேனைகளுடன் பின் தொடர்ந்து வந்தார். அரசனான பீஷ்மன் தங்களை வரவேற்று உபசரித்தான். தாங்கள் வந்த செய்தியைக் கூறிய அந்தணருக்கு, ருக்மிணி மிகுந்த அன்புடன் நமஸ்காரம் செய்தாள்.

भुवनकान्तमवेक्ष्य भवद्वपुर्नृपसुतस्य निशम्य च चेष्टितम् ।
विपुलखेदजुषां पुरवासिनां सरुदितैरुदितैरगमन्निशा ॥२॥

பு₄வநகாந்தமவேக்ஷ்ய ப₄வத்₃வபுர்ந்ருபஸுதஸ்ய நிஶம்ய ச சேஷ்டிதம் |
விபுலகே₂த₃ஜுஷாம் புரவாஸிநாம் ஸருதி₃தைருதி₃தைரக₃மந்நிஶா || 2||

2. உலகிலேயே அழகான உமது திருமேனியைக் கண்டும், ருக்மி எடுத்த முடிவைக் கேட்டும், குண்டின தேசத்து மக்கள் துயரமடைந்தார்கள். இரவும் கழிந்தது. 

तदनु वन्दितुमिन्दुमुखी शिवां विहितमङ्गलभूषणभासुरा ।
निरगमत् भवदर्पितजीविता स्वपुरत: पुरत: सुभटावृता ॥३॥

தத₃நு வந்தி₃துமிந்து₃முகீ₂ ஶிவாம் விஹிதமங்க₃லபூ₄ஷணபா₄ஸுரா |
நிரக₃மத் ப₄வத₃ர்பிதஜீவிதா ஸ்வபுரத: புரத: ஸுப₄டாவ்ருதா || 3||

3. மறுநாள் காலை, நிலவைப் போன்ற முகமுடைய ருக்மிணி, மங்களகரமான ஆடை ஆபரணங்களுடன், காவலர்கள் சூழ, பார்வதிதேவியை வணங்கக் கோவிலுக்குக் கிளம்பினாள். உம்மிடத்திலேயே அவள் மனத்தை அர்ப்பணித்திருந்தாள்.

कुलवधूभिरुपेत्य कुमारिका गिरिसुतां परिपूज्य च सादरम् ।
मुहुरयाचत तत्पदपङ्कजे निपतिता पतितां तव केवलम् ॥४॥

குலவதூ₄பி₄ருபேத்ய குமாரிகா கி₃ரிஸுதாம் பரிபூஜ்ய ச ஸாத₃ரம் |
முஹுரயாசத தத்பத₃பங்கஜே நிபதிதா பதிதாம் தவ கேவலம் || 4||

4. உயர்குலப் பெண்களுடன் பார்வதி தேவியின் ஆலயத்திற்குள் சென்று, நன்கு வழிபாடு செய்து, அவள் பாதங்களில் நமஸ்கரித்தாள். கிருஷ்ணனையே கணவனாக அளிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வேண்டினாள்.

समवलोककुतूहलसङ्कुले नृपकुले निभृतं त्वयि च स्थिते ।
नृपसुता निरगाद्गिरिजालयात् सुरुचिरं रुचिरञ्जितदिङ्मुखा ॥५॥

ஸமவலோககுதூஹலஸங்குலே ந்ருபகுலே நிப்₄ருதம் த்வயி ச ஸ்தி₂தே |
ந்ருபஸுதா நிரகா₃த்₃கி₃ரிஜாலயாத் ஸுருசிரம் ருசிரஞ்ஜிததி₃ங்முகா₂ || 5||

5. ருக்மிணியைக் காண வேண்டும் என்ற ஆவலில் பல நாட்டு அரசர்கள் கோவில் வாசலில் கூடியிருந்தார்கள். தாங்களும் ருக்மிணியைக் கிரஹிக்க எண்ணம்கொண்டு காத்திருந்தீர்கள். அப்போது ருக்மிணி, மிகுந்த அழகுடன் எல்லா திசைகளையும் ஆனந்தமுறச் செய்துகொண்டு, ஆலயத்திலிருந்து வெளியே வந்தாள்.

भुवनमोहनरूपरुचा तदा विवशिताखिलराजकदम्बया ।
त्वमपि देव कटाक्षविमोक्षणै: प्रमदया मदयाञ्चकृषे मनाक् ॥६॥

பு₄வநமோஹநரூபருசா ததா₃ விவஶிதாகி₂லராஜகத₃ம்ப₃யா |
த்வமபி தே₃வ கடாக்ஷவிமோக்ஷணை: ப்ரமத₃யா மத₃யாஞ்சக்ருஷே மநாக் || 6||

6. அவள் அழகானது உலகையே மயங்கச் செய்வதாய் இருந்தது. அவளது தேககாந்தியால் எல்லா அரசர்களும் மயங்கினர். அவளது கடைக்கண் பார்வையால் தாங்களும் மோஹித்தீர்கள்.

क्वनु गमिष्यसि चन्द्रमुखीति तां सरसमेत्य करेण हरन् क्षणात् ।
समधिरोप्य रथं त्वमपाहृथा भुवि ततो विततो निनदो द्विषाम् ॥७॥

க்வநு க₃மிஷ்யஸி சந்த்₃ரமுகீ₂தி தாம் ஸரஸமேத்ய கரேண ஹரந் க்ஷணாத் |
ஸமதி₄ரோப்ய ரத₂ம் த்வமபாஹ்ருதா₂ பு₄வி ததோ விததோ நிநதோ₃ த்₃விஷாம் || 7||

7. “நிலவைப் போன்ற முகமுடையவளே! எங்கே போகிறாய்?” என்று கேட்டு, நொடிப்பொழுதில் அவள் அருகே சென்று, அவளைக் கைகளினால் அன்புடன் பற்றி, ரதத்தில் ஏற்றிக்கொண்டு கவர்ந்து சென்றீர்கள். உடனே, அனைத்து திசைகளில் இருந்தும் எதிரிகளின் கூச்சல் அதிகமானது.

क्व नु गत: पशुपाल इति क्रुधा कृतरणा यदुभिश्च जिता नृपा: ।
न तु भवानुदचाल्यत तैरहो पिशुनकै: शुनकैरिव केसरी ॥८॥

க்வ நு க₃த: பஶுபால இதி க்ருதா₄ க்ருதரணா யது₃பி₄ஶ்ச ஜிதா ந்ருபா: |
ந து ப₄வாநுத₃சால்யத தைரஹோ பிஶுநகை: ஶுநகைரிவ கேஸரீ || 8||

8. இந்த இடைச்சிறுவன் எங்கிருந்து வந்தான்? என்று கூடியிருந்த அரசர்கள் கோபமடைந்து போர்புரியத் தொடங்கினார்கள். யாதவர்கள் அவர்களை ஜயித்தார்கள். நாய்க்கூட்டங்களைப் பார்த்த சிங்கம் போல், அந்த அரசர்களைக் கண்ட தாங்கள் சிறிதும் அசையவில்லை.

तदनु रुक्मिणमागतमाहवे वधमुपेक्ष्य निबध्य विरूपयन् ।
हृतमदं परिमुच्य बलोक्तिभि: पुरमया रमया सह कान्तया ॥९॥

தத₃நு ருக்மிணமாக₃தமாஹவே வத₄முபேக்ஷ்ய நிப₃த்₄ய விரூபயந் |
ஹ்ருதமத₃ம் பரிமுச்ய ப₃லோக்திபி₄: புரமயா ரமயா ஸஹ காந்தயா || 9||

9. ருக்மி எதிர்த்துப் போர்புரிய வந்தான். அவனைக் கட்டி இழுத்து, அவன் தலையை மொட்டை அடித்து, மீசையைக் கத்தரித்து அவன் கர்வத்தை அடக்கினீர்கள். பலராமனின் வேண்டுதலால் அவனை விடுவித்துக் கொல்லாமல் விட்டீர்கள். பிறகு, மகாலக்ஷ்மியான ருக்மிணியுடன் துவாரகைக்குச் சென்றீர்கள்.

नवसमागमलज्जितमानसां प्रणयकौतुकजृम्भितमन्मथाम् ।
अरमय: खलु नाथ यथासुखं रहसि तां हसितांशुलसन्मुखीम् ॥१०॥

நவஸமாக₃மலஜ்ஜிதமாநஸாம் ப்ரணயகௌதுகஜ்ரும்பி₄தமந்மதா₂ம் |
அரமய: க₂லு நாத₂ யதா₂ஸுக₂ம் ரஹஸி தாம் ஹஸிதாம்ஶுலஸந்முகீ₂ம் || 10||

10. தங்களது சேர்க்கையால் ருக்மிணி மிகுந்த நாணத்தை அடைந்தாள். புதிய காதல் அனுபவத்தால் மிகுந்த சந்தோஷமடைந்தாள். அவள் முகம் மந்தஹாஸப் புன்னகையுடன் விளங்கியது. தனிமையில் ருக்மிணிக்குப் பலவகையில் ஆனந்தமளித்தீர்கள்.

विविधनर्मभिरेवमहर्निशं प्रमदमाकलयन् पुनरेकदा ।
ऋजुमते: किल वक्रगिरा भवान् वरतनोरतनोदतिलोलताम् ॥११॥

விவித₄நர்மபி₄ரேவமஹர்நிஶம் ப்ரமத₃மாகலயந் புநரேகதா₃ |
ருஜுமதே: கில வக்ரகி₃ரா ப₄வாந் வரதநோரதநோத₃திலோலதாம் || 11||

11. இரவும் பகலும் விளையாட்டுப் பேச்சுக்களால் மகிழச் செய்தீர்கள். ஒரு முறை பரிஹாஸமாகப் பேசி, ருக்மிணியைக் கலங்கச் செய்தீர்கள். பிறகு சமாதானமும் செய்தீர்கள்.

तदधिकैरथ लालनकौशलै: प्रणयिनीमधिकं सुखयन्निमाम् ।
अयि मुकुन्द भवच्चरितानि न: प्रगदतां गदतान्तिमपाकुरु ॥१२॥

தத₃தி₄கைரத₂ லாலநகௌஶலை: ப்ரணயிநீமதி₄கம் ஸுக₂யந்நிமாம் |
அயி முகுந்த₃ ப₄வச்சரிதாநி ந: ப்ரக₃த₃தாம் க₃த₃தாந்திமபாகுரு || 12||

12. முன்பை விடப் பலவிதமாய் அரவணைத்து, அவளை சந்தோஷமடையச் செய்தீர்கள். முகுந்தனே! உமது பெருமைகளையும், சரித்திரங்களையுமே சொல்லிக் கொண்டிருக்கும் எனக்கு, நோயினால் உண்டான தாபத்தையும், சோர்வையும் போக்கி அருள வேண்டும்.

1 comment:


  1. Madam I am also like u I am retd bsnl employee. I want to talk with u.

    ReplyDelete