Monday, May 19, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 80

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 80, ஸ்ரீ நாராயணீயம் 80வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -80
ஸ்யமந்தக மணியின் கதை

सत्राजितस्त्वमथ लुब्धवदर्कलब्धं
दिव्यं स्यमन्तकमणिं भगवन्नयाची: ।
तत्कारणं बहुविधं मम भाति नूनं
तस्यात्मजां त्वयि रतां छलतो विवोढुम् ॥१॥

ஸத்ராஜிதஸ்த்வமத₂ லுப்₃த₄வத₃ர்கலப்₃த₄ம்
தி₃வ்யம் ஸ்யமந்தகமணிம் ப₄க₃வந்நயாசீ: |
தத்காரணம் ப₃ஹுவித₄ம் மம பா₄தி நூநம்
தஸ்யாத்மஜாம் த்வயி ரதாம் ச₂லதோ விவோடு₄ம் || 1||

1. ஸத்ராஜித் என்பவன் சூரியனிடமிருந்து ஸ்யமந்தகம் என்ற மணியைப் பெற்றான். அதைத் தாங்கள் கேட்டீர்கள். அப்படிக் கேட்டதற்குப் பல காரணங்கள் உண்டு. உம்மிடம் அன்பு கொண்ட அவனுடைய மகளான ஸத்யபாமாவை மணப்பதற்காகக் கேட்டிருக்கலாம்.

अदत्तं तं तुभ्यं मणिवरमनेनाल्पमनसा
प्रसेनस्तद्भ्राता गलभुवि वहन् प्राप मृगयाम् ।
अहन्नेनं सिंहो मणिमहसि मांसभ्रमवशात्
कपीन्द्रस्तं हत्वा मणिमपि च बालाय ददिवान् ॥२॥

அத₃த்தம் தம் துப்₄யம் மணிவரமநேநால்பமநஸா
ப்ரஸேநஸ்தத்₃ப்₄ராதா க₃லபு₄வி வஹந் ப்ராப ம்ருக₃யாம் |
அஹந்நேநம் ஸிம்ஹோ மணிமஹஸி மாம்ஸப்₄ரமவஶாத்
கபீந்த்₃ரஸ்தம் ஹத்வா மணிமபி ச பா₃லாய த₃தி₃வாந் || 2||

2. குறுகிய மனம் படைத்த அவன் அந்த மணியைக் கொடுக்கவில்லை. ஸத்ராஜித்தின் தம்பி ப்ரஸேனன். அவன் அந்த மணியைக் கழுத்தில் அணிந்துகொண்டு வேட்டையாடச் சென்றான். ஒரு சிங்கம், அந்த மணியை மாமிசம் என்று நினைத்து, அவனைக் கொன்று அந்த மணியை எடுத்துச் சென்றது. வானரங்களின் தலைவனான ஜாம்பவான் என்ற கரடி, அந்த சிங்கத்தைக் கொன்று, மணியைத் தன் குழந்தையிடம் கொடுத்தது.

शशंसु: सत्राजिद्गिरमनु जनास्त्वां मणिहरं
जनानां पीयूषं भवति गुणिनां दोषकणिका ।
तत: सर्वज्ञोऽपि स्वजनसहितो मार्गणपर:
प्रसेनं तं दृष्ट्वा हरिमपि गतोऽभू: कपिगुहाम् ॥३॥

ஶஶம்ஸு: ஸத்ராஜித்₃கி₃ரமநு ஜநாஸ்த்வாம் மணிஹரம்
ஜநாநாம் பீயூஷம் ப₄வதி கு₃ணிநாம் தோ₃ஷகணிகா |
தத: ஸர்வஜ்ஞோ(அ)பி ஸ்வஜநஸஹிதோ மார்க₃ணபர:
ப்ரஸேநம் தம் த்₃ருஷ்ட்வா ஹரிமபி க₃தோ(அ)பூ₄: கபிகு₃ஹாம் || 3||

3. தாங்கள் அந்த மணியைத் திருடியதாக ஸத்ராஜித் கூறியதைக் கேட்ட மக்களும் அவ்வாறே கூறினார்கள். நற்குணம் படைத்தவர்களிடத்தில் சிறு பிழையைக் கண்டாலும் மக்கள் அதையே பேசுவார்கள். எல்லாவற்றையும் அறிந்திருந்தும் தாங்கள் அம்மணியைத் தேடிப் புறப்பட்டீர்கள். வழியில், ப்ரஸேனனும், ஒரு சிங்கமும் இறந்து கிடப்பதைக் கண்டீர்கள். மேலும் தேடிக்கொண்டே ஜாம்பவானின் குகையை அடைந்தீர்கள்.

भवन्तमवितर्कयन्नतिवया: स्वयं जाम्बवान्
मुकुन्दशरणं हि मां क इह रोद्धुमित्यालपन् ।
विभो रघुपते हरे जय जयेत्यलं मुष्टिभि-
श्चिरं तव समर्चनं व्यधित भक्तचूडामणि: ॥४॥

ப₄வந்தமவிதர்கயந்நதிவயா: ஸ்வயம் ஜாம்ப₃வாந்
முகுந்த₃ஶரணம் ஹி மாம் க இஹ ரோத்₃து₄மித்யாலபந் |
விபோ₄ ரகு₄பதே ஹரே ஜய ஜயேத்யலம் முஷ்டிபி₄-
ஶ்சிரம் தவ ஸமர்சநம் வ்யதி₄த ப₄க்தசூடா₃மணி: || 4||

4. வயது முதிர்ந்த ஜாம்பவான், தங்களை ஸ்ரீஹரி என்று அறியாமல், முகுந்தனை சரணடைந்து வாழும் என்னை எதிர்க்க யாரால் முடியும்? பிரபுவே! ராமனே! தாங்கள் வெற்றியுடன் விளங்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு வெகுநேரம் உம்முடன் மல்யுத்தம் புரிந்து, தமது முஷ்டிகளால் குத்தி, உமக்கு சிறந்த பூஜை செய்தார்.

बुध्वाऽथ तेन दत्तां नवरमणीं वरमणिं च परिगृह्णन् ।
अनुगृह्णन्नमुमागा: सपदि च सत्राजिते मणिं प्रादा: ॥५॥

பு₃த்₄வா(அ)த₂ தேந த₃த்தாம் நவரமணீம் வரமணிம் ச பரிக்₃ருஹ்ணந் |
அநுக்₃ருஹ்ணந்நமுமாகா₃: ஸபதி₃ ச ஸத்ராஜிதே மணிம் ப்ராதா₃: || 5||

5. தங்களைத் தன் தெய்வம் என அறிந்ததும், ஜாம்பவான் அந்த ஸ்யமந்தகமணியையும், தன் மகளாகிய ஜாம்பவதியையும் தங்களுக்கு அளித்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டு, ஜாம்பவானை ஆசீர்வதித்து, ஸ்யமந்தகமணியை ஸத்ராஜித்திடம் ஒப்படைத்தீர்கள்.

तदनु स खलु ब्रीलालोलो विलोलविलोचनां
दुहितरमहो धीमान् भामां गिरैव परार्पिताम् ।
अदित मणिना तुभ्यं लभ्यं समेत्य भवानपि
प्रमुदितमनास्तस्यैवादान्मणिं गहनाशय: ॥६॥

தத₃நு ஸ க₂லு ப்₃ரீலாலோலோ விலோலவிலோசநாம்
து₃ஹிதரமஹோ தீ₄மாந் பா₄மாம் கி₃ரைவ பரார்பிதாம் |
அதி₃த மணிநா துப்₄யம் லப்₄யம் ஸமேத்ய ப₄வாநபி
ப்ரமுதி₃தமநாஸ்தஸ்யைவாதா₃ந்மணிம் க₃ஹநாஶய: || 6||

6. ஸத்ராஜித் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான். தன் பெண்ணான ஸத்யபாமாவையும், ஸ்யமந்தகமணியையும் உமக்கு அளித்தான். தாங்கள் ஸத்யபாமாவை மட்டும் ஏற்றுக்கொண்டு, அந்த மணியை அவனிடமே திருப்பிக் கொடுத்தீர்.

व्रीलाकुलां रमयति त्वयि सत्यभामां
कौन्तेयदाहकथयाथ कुरून् प्रयाते ।
ही गान्दिनेयकृतवर्मगिरा निपात्य
सत्राजितं शतधनुर्मणिमाजहार ॥७॥

வ்ரீலாகுலாம் ரமயதி த்வயி ஸத்யபா₄மாம்
கௌந்தேயதா₃ஹகத₂யாத₂ குரூந் ப்ரயாதே |
ஹீ கா₃ந்தி₃நேயக்ருதவர்மகி₃ரா நிபாத்ய
ஸத்ராஜிதம் ஶதத₄நுர்மணிமாஜஹார || 7||

7. மிகுந்த நாணத்தை அடைந்த ஸத்யபாமாவுடன் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வந்தீர். அரக்கு மாளிகையில் பாண்டவர்கள் எரிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டு, ஹஸ்தினாபுரத்திற்குச் சென்றீர். சததன்வா என்பவன் அக்ரூரர், கிருதவர்மா ஆகியோர் கூறியதால் ஸத்ராஜித்தைக் கொன்று ஸ்யமந்தகமணியைக் கவர்ந்தான்.

शोकात् कुरूनुपगतामवलोक्य कान्तां
हत्वा द्रुतं शतधनुं समहर्षयस्ताम् ।
रत्ने सशङ्क इव मैथिलगेहमेत्य
रामो गदां समशिशिक्षत धार्तराष्ट्रम् ॥८॥

ஶோகாத் குரூநுபக₃தாமவலோக்ய காந்தாம்
ஹத்வா த்₃ருதம் ஶதத₄நும் ஸமஹர்ஷயஸ்தாம் |
ரத்நே ஸஶங்க இவ மைதி₂லகே₃ஹமேத்ய
ராமோ க₃தா₃ம் ஸமஶிஶிக்ஷத தா₄ர்தராஷ்ட்ரம் || 8||

8. தந்தை இறந்ததை அறிந்த ஸத்யபாமா, மிகுந்த துக்கத்துடன், ஹஸ்தினாபுரம் வந்தாள். தாங்களும் சததன்வாவை அழித்து, ஸத்யபாமாவிற்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்தீர். பலராமன் மிதிலாநகரம் சென்று, துரியோதனனுக்கு கதாயுதத்தைக் கற்றுக் கொடுத்தார்.

अक्रूर एष भगवन् भवदिच्छयैव
सत्राजित: कुचरितस्य युयोज हिंसाम् ।
अक्रूरतो मणिमनाहृतवान् पुनस्त्वं
तस्यैव भूतिमुपधातुमिति ब्रुवन्ति ॥९॥

அக்ரூர ஏஷ ப₄க₃வந் ப₄வதி₃ச்ச₂யைவ
ஸத்ராஜித: குசரிதஸ்ய யுயோஜ ஹிம்ஸாம் |
அக்ரூரதோ மணிமநாஹ்ருதவாந் புநஸ்த்வம்
தஸ்யைவ பூ₄திமுபதா₄துமிதி ப்₃ருவந்தி || 9||

9. அக்ரூரர் தங்கள் மீது கொண்ட அன்பினால், தாங்கள் மணியைத் திருடியதாகக் கூறிய ஸத்ராஜித்தைக் கொல்லும்படி கூறினார் என்றும், அக்ரூரர் ஐஸ்வர்யம் பெற வேண்டும் என்றே தாங்களும் அம்மணியை அவரிடமிருந்து பெறவில்லை என்றும் ஞானியர் கூறுகின்றனர்.

भक्तस्त्वयि स्थिरतर: स हि गान्दिनेय-
स्तस्यैव कापथमति: कथमीश जाता ।
विज्ञानवान् प्रशमवानहमित्युदीर्णं
गर्वं ध्रुवं शमयितुं भवता कृतैव ॥१०॥

ப₄க்தஸ்த்வயி ஸ்தி₂ரதர: ஸ ஹி கா₃ந்தி₃நேய-
ஸ்தஸ்யைவ காபத₂மதி: கத₂மீஶ ஜாதா |
விஜ்ஞாநவாந் ப்ரஶமவாநஹமித்யுதீ₃ர்ணம்
க₃ர்வம் த்₄ருவம் ஶமயிதும் ப₄வதா க்ருதைவ || 10||

10. உம்மிடம் அசையாத பக்தி கொண்டவர் அக்ரூரர். ஸத்ராஜித்தைக் கொல்லும் தீய எண்ணம் அவருக்கு எப்படித் தோன்றியது? தன் அறிவைப் பற்றி அவர் கொண்ட கர்வத்தைப் போக்கவே அவ்வாறு தோன்றும்படி செய்தீர்கள். நிச்சயம்.

यातं भयेन कृतवर्मयुतं पुनस्त-
माहूय तद्विनिहितं च मणिं प्रकाश्य ।
तत्रैव सुव्रतधरे विनिधाय तुष्यन्
भामाकुचान्तशयन: पवनेश पाया: ॥११॥

யாதம் ப₄யேந க்ருதவர்மயுதம் புநஸ்த-
மாஹூய தத்₃விநிஹிதம் ச மணிம் ப்ரகாஶ்ய |
தத்ரைவ ஸுவ்ரதத₄ரே விநிதா₄ய துஷ்யந்
பா₄மாகுசாந்தஶயந: பவநேஶ பாயா: || 11||

11. அக்ரூரரும், க்ருதவர்மாவும் அஞ்சி வேறு தேசம் சென்றனர். அவரை வரச்சொல்லி, அவரிடம் சததன்வா கொடுத்திருந்த ஸ்யமந்தகமணியை, பலராமன் முதலியவர்களிடத்தில் காட்டச் சொன்னீர்கள். நற்காரியங்களையே செய்யும் அக்ரூரரிடமே அந்த மணியைத் திருப்பிக் கொடுத்தீர்கள். குருவாயூரப்பனே! ஸத்யபாமாவுடன் ஆனந்தமாய் வசிப்பவனே! தாங்கள் என்னைக் காக்க வேண்டும்.


No comments:

Post a Comment