Saturday, May 24, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 85

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 85, ஸ்ரீ நாராயணீயம் 85வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -85
ஜராஸந்த வதம், சிசுபால மோக்ஷம் 

ततो मगधभूभृता चिरनिरोधसंक्लेशितं
शताष्टकयुतायुतद्वितयमीश भूमीभृताम् ।
अनाथशरणाय ते कमपि पूरुषं प्राहिणो-
दयाचत स मागधक्षपणमेव किं भूयसा ॥१॥

ததோ மக₃த₄பூ₄ப்₄ருதா சிரநிரோத₄ஸம்க்லேஶிதம்
ஶதாஷ்டகயுதாயுதத்₃விதயமீஶ பூ₄மீப்₄ருதாம் |
அநாத₂ஶரணாய தே கமபி பூருஷம் ப்ராஹிணோ-
த₃யாசத ஸ மாக₃த₄க்ஷபணமேவ கிம் பூ₄யஸா || 1||

1. ஜராஸந்தன் இருபதினாயிரத்து எண்ணூறு அரசர்களை சிறையில் அடைத்தான். வெகுகாலமாய் அடைபட்டிருந்த அவர்கள், உம்மிடத்தில் யாரோ ஒருவனைத் தூதுவனாக அனுப்பினார்கள். அவனும் மகத தேசத்து அரசனான ஜராஸந்தனை அழிக்கும்படி உம்மிடம் வேண்டினான்.

यियासुरभिमागधं तदनु नारदोदीरिता-
द्युधिष्ठिरमखोद्यमादुभयकार्यपर्याकुल: ।
विरुद्धजयिनोऽध्वरादुभयसिद्धिरित्युद्धवे
शशंसुषि निजै: समं पुरमियेथ यौधिष्ठिरीम् ॥२॥

யியாஸுரபி₄மாக₃த₄ம் தத₃நு நாரதோ₃தீ₃ரிதா-
த்₃யுதி₄ஷ்டி₂ரமகோ₂த்₃யமாது₃ப₄யகார்யபர்யாகுல: |
விருத்₃த₄ஜயிநோ(அ)த்₄வராது₃ப₄யஸித்₃தி₄ரித்யுத்₃த₄வே
ஶஶம்ஸுஷி நிஜை: ஸமம் புரமியேத₂ யௌதி₄ஷ்டி₂ரீம் || 2||

2. தாங்கள் மகத நாட்டிற்கு யுத்தம் செய்ய புறப்பட்டபோது, யுதிஷ்டிரர் ராஜஸூய யாகம் நடத்த இருப்பதாக நாரதர் தெரிவித்தார். இவ்விரண்டில் எதை முதலில் செய்வது என்று கலங்கினீர். அப்போது உத்தவர், ராஜஸூய யாகம் எதிரிகளை ஜயித்த பின்னர் நடத்தப்பட வேண்டியதாகும். ஆதலால் இவ்விரண்டும் ஒரே சமயத்தில் நடக்கும் என்று கூறினார். உடனே யாதவப் படைகளோடு பாண்டவர்களின் தலைநகரான இந்திரப்ரஸ்தம் சென்றீர்.

अशेषदयितायुते त्वयि समागते धर्मजो
विजित्य सहजैर्महीं भवदपाङ्गसंवर्धितै: ।
श्रियं निरुपमां वहन्नहह भक्तदासायितं
भवन्तमयि मागधे प्रहितवान् सभीमार्जुनम् ॥३॥

அஶேஷத₃யிதாயுதே த்வயி ஸமாக₃தே த₄ர்மஜோ
விஜித்ய ஸஹஜைர்மஹீம் ப₄வத₃பாங்க₃ஸம்வர்தி₄தை: |
ஶ்ரியம் நிருபமாம் வஹந்நஹஹ ப₄க்ததா₃ஸாயிதம்
ப₄வந்தமயி மாக₃தே₄ ப்ரஹிதவாந் ஸபீ₄மார்ஜுநம் || 3||

3. தங்களது எல்லா மனைவியருடனும் இந்திரப்ரஸ்தம் சென்றீர். தங்களது அருட்பார்வையால் பலம் பெற்ற சகோதரர்களுடன், யுதிஷ்டிரர் அனைத்து நாடுகளையும் ஜயித்து, அளவற்ற பொருட்களைப் பெற்றார். பிறகு, பக்தர்களுக்கு அடியவனான தங்களை, பீமன், அர்ஜுனன் ஆகியோருடன் ஜராஸந்தனிடம் அனுப்பினார்.

गिरिव्रजपुरं गतास्तदनु देव यूयं त्रयो
ययाच समरोत्सवं द्विजमिषेण तं मागधम् ।
अपूर्णसुकृतं त्वमुं पवनजेन संग्रामयन्
निरीक्ष्य सह जिष्णुना त्वमपि राजयुद्ध्वा स्थित: ॥४॥

கி₃ரிவ்ரஜபுரம் க₃தாஸ்தத₃நு தே₃வ யூயம் த்ரயோ
யயாச ஸமரோத்ஸவம் த்₃விஜமிஷேண தம் மாக₃த₄ம் |
அபூர்ணஸுக்ருதம் த்வமும் பவநஜேந ஸம்க்₃ராமயந்
நிரீக்ஷ்ய ஸஹ ஜிஷ்ணுநா த்வமபி ராஜயுத்₃த்₄வா ஸ்தி₂த: || 4||

4. தாங்கள், பீமன், அர்ஜுனன் ஆகியோருடன் கிரிவ்ரஜம் என்ற ஜராஸந்தனின் நகரை அடைந்தீர்கள். பிராம்மண வேஷம் பூண்டு ஜராஸந்தனிடம் யுத்தம் செய்ய ஒரு போட்டியை யாசித்தீர்கள். புண்ணியம் செய்யாத ஜராஸந்தனை பீமனோடு போரிடும்படி செய்தீர். அரசகுலத்தைச் சேர்ந்த அவர்கள் மோதுவதை அர்ஜுனனுடன் பார்த்துக் கொண்டிருந்தீர்.

अशान्तसमरोद्धतं बिटपपाटनासंज्ञया
निपात्य जररस्सुतं पवनजेन निष्पाटितम् ।
विमुच्य नृपतीन् मुदा समनुगृह्य भक्तिं परां
दिदेशिथ गतस्पृहानपि च धर्मगुप्त्यै भुव: ॥५॥

அஶாந்தஸமரோத்₃த₄தம் பி₃டபபாடநாஸம்ஜ்ஞயா
நிபாத்ய ஜரரஸ்ஸுதம் பவநஜேந நிஷ்பாடிதம் |
விமுச்ய ந்ருபதீந் முதா₃ ஸமநுக்₃ருஹ்ய ப₄க்திம் பராம்
தி₃தே₃ஶித₂ க₃தஸ்ப்ருஹாநபி ச த₄ர்மகு₃ப்த்யை பு₄வ: || 5||

5. முடிவடையாத, நீண்ட அந்த யுத்தத்தில், ஜராஸந்தன் மூர்க்கமாகப் போரிட்டான். அப்போது, ஒரு குச்சியை இரண்டாக முறித்துக் கீழே போட்டு குறிப்பால் பீமனுக்கு உணர்த்தினீர். பீமனும் ஜராஸந்தனைக் இரண்டாகக் கிழித்துக் கொன்றான். பின்னர், சிறைப்பட்டிருந்த அரசர்களை விடுவித்தீர். அவர்களுக்கு பக்தியை அளித்து, பற்றற்றிருந்த அவர்களை தர்மத்துடன் அவரவர்கள் நாட்டை ஆளும்படிக் கட்டளையிட்டீர்.

प्रचक्रुषि युधिष्ठिरे तदनु राजसूयाध्वरं
प्रसन्नभृतकीभवत्सकलराजकव्याकुलम् ।
त्वमप्ययि जगत्पते द्विजपदावनेजादिकं
चकर्थ किमु कथ्यते नृपवरस्य भाग्योन्नति: ॥६॥

ப்ரசக்ருஷி யுதி₄ஷ்டி₂ரே தத₃நு ராஜஸூயாத்₄வரம்
ப்ரஸந்நப்₄ருதகீப₄வத்ஸகலராஜகவ்யாகுலம் |
த்வமப்யயி ஜக₃த்பதே த்₃விஜபதா₃வநேஜாதி₃கம்
சகர்த₂ கிமு கத்₂யதே ந்ருபவரஸ்ய பா₄க்₃யோந்நதி: || 6||

6. தர்மபுத்திரர் ராஜஸூய யாகத்தைத் தொடங்கினார். எல்லா அரசர்களும் மகிழ்ச்சியுடன் வந்திருந்தார்கள். தாங்களும், யாகத்திற்கு வந்திருந்த அந்தணர்களின் பாதத்தை அலம்பி, பட்டுத் துணியால் துடைத்துப் பணிவிடைகள் செய்தீர். தர்மபுத்திரரின் அதிர்ஷ்டத்தை என்னென்று சொல்வேன்?!

तत: सवनकर्मणि प्रवरमग्र्यपूजाविधिं
विचार्य सहदेववागनुगत: स धर्मात्मज: ।
व्यधत्त भवते मुदा सदसि विश्वभूतात्मने
तदा ससुरमानुषं भुवनमेव तृप्तिं दधौ ॥७॥

தத: ஸவநகர்மணி ப்ரவரமக்₃ர்யபூஜாவிதி₄ம்
விசார்ய ஸஹதே₃வவாக₃நுக₃த: ஸ த₄ர்மாத்மஜ: |
வ்யத₄த்த ப₄வதே முதா₃ ஸத₃ஸி விஶ்வபூ₄தாத்மநே
ததா₃ ஸஸுரமாநுஷம் பு₄வநமேவ த்ருப்திம் த₃தௌ₄ || 7||

7. வந்தவர்களில் சிறந்த ஒருவரைப் பூஜிப்பது அந்த யாகத்தின் முக்கியமான அம்சமாகும். அப்போது தர்மர் யாரைப் பூஜிப்பது என்று யோசித்தார். சகாதேவனுடைய ஆலோசனைப்படி உம்மைத் தேர்ந்தெடுத்தனர். தர்மபுத்திரரும், உலக மக்கள் அனைவரிடத்திலும் அந்தர்யாமியாய் இருக்கும் தங்களைப் பூஜித்து மகிழ்ச்சியடைந்தார். அப்போது உலகத்திலுள்ளவர்களும், தேவர்களும் ஆனந்தம் அடைந்தனர்.

तत: सपदि चेदिपो मुनिनृपेषु तिष्ठत्स्वहो
सभाजयति को जड: पशुपदुर्दुरूटं वटुम् ।
इति त्वयि स दुर्वचोविततिमुद्वमन्नासना-
दुदापतदुदायुध: समपतन्नमुं पाण्डवा: ॥८॥

தத: ஸபதி₃ சேதி₃போ முநிந்ருபேஷு திஷ்ட₂த்ஸ்வஹோ
ஸபா₄ஜயதி கோ ஜட₃: பஶுபது₃ர்து₃ரூடம் வடும் |
இதி த்வயி ஸ து₃ர்வசோவிததிமுத்₃வமந்நாஸநா-
து₃தா₃பதது₃தா₃யுத₄: ஸமபதந்நமும் பாண்ட₃வா: || 8||

8. தங்களைப் பூஜிப்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, சிசுபாலன் ஆசனத்திலிருந்து எழுந்து, “ எந்த முட்டாள், மட்டமான இந்தச் சிறிய இடையனான கிருஷ்ணனை மதித்துத் தேர்ந்தெடுப்பான்? என்று கூறினான். ஆயுதம் ஏந்திக்கொண்டு, பல கெட்ட வார்த்தைகளைக் கூறினான். அதைக் கேட்ட பாண்டவர்கள் சிசுபாலனை எதிர்த்தனர்.

निवार्य निजपक्षगानभिमुखस्यविद्वेषिण-
स्त्वमेव जहृषे शिरो दनुजदारिणा स्वारिणा ।
जनुस्त्रितयलब्धया सततचिन्तया शुद्धधी-
स्त्वया स परमेकतामधृत योगिनां दुर्लभाम् ॥९॥

நிவார்ய நிஜபக்ஷகா₃நபி₄முக₂ஸ்யவித்₃வேஷிண-
ஸ்த்வமேவ ஜஹ்ருஷே ஶிரோ த₃நுஜதா₃ரிணா ஸ்வாரிணா |
ஜநுஸ்த்ரிதயலப்₃த₄யா ஸததசிந்தயா ஶுத்₃த₄தீ₄-
ஸ்த்வயா ஸ பரமேகதாமத்₄ருத யோகி₃நாம் து₃ர்லபா₄ம் || 9||

9. பாண்டவர்களைத் தடுத்து, எதிர்த்த சிசுபாலனின் தலையை, சக்ராயுதத்தால் தாங்களே அறுத்தீர். மூன்று ஜன்மாக்களிலும் தங்களையே நினைத்ததால் தூய்மை பெற்ற அந்த சிசுபாலன், தங்களோடு ஐக்கியமானான். யோகிகளுக்குக் கூட அத்தகைய பேறு கிடைக்காது!

तत: सुमहिते त्वया क्रतुवरे निरूढे जनो
ययौ जयति धर्मजो जयति कृष्ण इत्यालपन्।
खल: स तु सुयोधनो धुतमनास्सपत्नश्रिया
मयार्पितसभामुखे स्थलजलभ्रमादभ्रमीत् ॥१०॥

தத: ஸுமஹிதே த்வயா க்ரதுவரே நிரூடே₄ ஜநோ
யயௌ ஜயதி த₄ர்மஜோ ஜயதி க்ருஷ்ண இத்யாலபந்|
க₂ல: ஸ து ஸுயோத₄நோ து₄தமநாஸ்ஸபத்நஶ்ரியா
மயார்பிதஸபா₄முகே₂ ஸ்த₂லஜலப்₄ரமாத₃ப்₄ரமீத் || 10||

10. ராஜஸூய யாகமும் நிறைவடைந்தது. எல்லா மக்களும் தர்மபுத்திரரை வாழ்த்திக் கொண்டே சென்றார்கள். அதைக் கண்டு பொறாமை கொண்ட துரியோதனன், மயனால் நிர்மாணிக்கப்பட்ட சபைக்கு வந்தான். முன் மண்டபத்தில், தரையை ஜலம் போலவும், ஜலத்தைத் தரை போலவும் நிர்மாணித்திருந்ததால், துரியோதனன் வேறுபாடு தெரியாமல் குழம்பித் திகைத்தான்.

तदा हसितमुत्थितं द्रुपदनन्दनाभीमयो-
रपाङ्गकलया विभो किमपि तावदुज्जृम्भयन् ।
धराभरनिराकृतौ सपदि नाम बीजं वपन्
जनार्दन मरुत्पुरीनिलय पाहि मामामयात् ॥११॥

ததா₃ ஹஸிதமுத்தி₂தம் த்₃ருபத₃நந்த₃நாபீ₄மயோ-
ரபாங்க₃கலயா விபோ₄ கிமபி தாவது₃ஜ்ஜ்ரும்ப₄யந் |
த₄ராப₄ரநிராக்ருதௌ ஸபதி₃ நாம பீ₃ஜம் வபந்
ஜநார்த₃ந மருத்புரீநிலய பாஹி மாமாமயாத் || 11||

11. வேறுபாடு தெரியாமல் துரியோதனன் சறுக்கி விழுந்தான். அவனைப் பார்த்து திரௌபதியும், பீமனும் சிரித்தார்கள். தங்கள் கடைக்கண் பார்வையால் அவர்களை அதிகமாய் உரத்துச் சிரிக்கச் செய்தீர்கள். பூமியின் பாரத்தைப் போக்குவதற்குத் தாங்கள் விதைத்த விதையாக அச்செயல் அமைந்தது. தீயவர்களுக்குத் துன்பத்தைத் தருபவனே! குருவாயூரப்பனே! நோயிலிருந்து அடியேனைக் காக்க வேண்டும்.

No comments:

Post a Comment