Sunday, May 25, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 86

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 86, ஸ்ரீ நாராயணீயம் 86வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -86
ஸால்வ வதம், மகாபாரத யுத்தம்

साल्वो भैष्मीविवाहे यदुबलविजितश्चन्द्रचूडाद्विमानं
विन्दन् सौभं स मायी त्वयि वसति कुरुंस्त्वत्पुरीमभ्यभाङ्क्षीत् ।
प्रद्युम्नस्तं निरुन्धन्निखिलयदुभटैर्न्यग्रहीदुग्रवीर्यं
तस्यामात्यं द्युमन्तं व्यजनि च समर: सप्तविंशत्यहान्त: ॥१॥

ஸால்வோ பை₄ஷ்மீவிவாஹே யது₃ப₃லவிஜிதஶ்சந்த்₃ரசூடா₃த்₃விமாநம்
விந்த₃ந் ஸௌப₄ம் ஸ மாயீ த்வயி வஸதி குரும்ஸ்த்வத்புரீமப்₄யபா₄ங்க்ஷீத் |
ப்ரத்₃யும்நஸ்தம் நிருந்த₄ந்நிகி₂லயது₃ப₄டைர்ந்யக்₃ரஹீது₃க்₃ரவீர்யம்
தஸ்யாமாத்யம் த்₃யுமந்தம் வ்யஜநி ச ஸமர: ஸப்தவிம்ஶத்யஹாந்த: || 1||

1. ஸால்வன் என்ற அரசன், ருக்மிணி கல்யாணம் நடந்த சமயத்தில் யாதவ சேனைகளால் தோற்கடிக்கப்பட்டான். அவன் பரமசிவனைப் பூஜித்து ‘ஸௌபம்’ என்ற விமானத்தைப் பெற்றான். தாங்கள் ராஜஸூய யாகத்திற்காகச் சென்றிருந்தபோது துவாரகையை முற்றுகையிட்டான். பிரத்யும்னன் அவனை எதிர்த்துப் போரிட்டான். த்யுமான் என்ற ஸால்வனின் மந்திரியையும் கொன்றான். இருபத்தியேழு நாட்கள் அந்த யுத்தம் நடந்தது.

तावत्त्वं रामशाली त्वरितमुपगत: खण्डितप्रायसैन्यं
सौभेशं तं न्यरुन्धा: स च किल गदया शार्ङ्गमभ्रंशयत्ते ।
मायातातं व्यहिंसीदपि तव पुरतस्तत्त्वयापि क्षणार्धं
नाज्ञायीत्याहुरेके तदिदमवमतं व्यास एव न्यषेधीत् ॥२॥

தாவத்த்வம் ராமஶாலீ த்வரிதமுபக₃த: க₂ண்டி₃தப்ராயஸைந்யம்
ஸௌபே₄ஶம் தம் ந்யருந்தா₄: ஸ ச கில க₃த₃யா ஶார்ங்க₃மப்₄ரம்ஶயத்தே |
மாயாதாதம் வ்யஹிம்ஸீத₃பி தவ புரதஸ்தத்த்வயாபி க்ஷணார்த₄ம்
நாஜ்ஞாயீத்யாஹுரேகே ததி₃த₃மவமதம் வ்யாஸ ஏவ ந்யஷேதீ₄த் || 2||

2. தாங்கள் பலராமனுடன் துவாரகைக்கு விரைந்து வந்து, எல்லா படைகளையும் அழித்து, ஸால்வனையும் எதிர்த்தீர். அவன் தன்னுடைய கதையால் உம்முடைய வில்லைக் கீழே தள்ளினான். தங்கள் தந்தையான வசுதேவரைப் போல ஒரு உருவம் செய்து அதனைக் கொன்றான். தாங்கள் அவனது மாயையை க்ஷணநேரம் அறியவில்லை என்று சிலர் சொல்வார்கள். ஆனால் வியாசர் அதை மறுத்திருக்கிறார்.

क्षिप्त्वा सौभं गदाचूर्णितमुदकनिधौ मङ्क्षु साल्वेऽपि चक्रे-
णोत्कृत्ते दन्तवक्त्र: प्रसभमभिपतन्नभ्यमुञ्चद्गदां ते ।
कौमोदक्या हतोऽसावपि सुकृतनिधिश्चैद्यवत्प्रापदैक्यं
सर्वेषामेष पूर्वं त्वयि धृतमनसां मोक्षणार्थोऽवतार: ॥३॥

க்ஷிப்த்வா ஸௌப₄ம் க₃தா₃சூர்ணிதமுத₃கநிதௌ₄ மங்க்ஷு ஸால்வே(அ)பி சக்ரே-
ணோத்க்ருத்தே த₃ந்தவக்த்ர: ப்ரஸப₄மபி₄பதந்நப்₄யமுஞ்சத்₃க₃தா₃ம் தே |
கௌமோத₃க்யா ஹதோ(அ)ஸாவபி ஸுக்ருதநிதி₄ஶ்சைத்₃யவத்ப்ராபதை₃க்யம்
ஸர்வேஷாமேஷ பூர்வம் த்வயி த்₄ருதமநஸாம் மோக்ஷணார்தோ₂(அ)வதார: || 3||

3. ஸால்வனுடைய ‘ஸௌபம்’ என்ற விமானத்தை, கதையால் உடைத்து, கடலில் எறிந்தீர். ஸால்வனின் தலையை சக்ராயுதத்தால் அறுத்தீர். தந்தவக்த்ரன் கதையைத் தங்கள்மேல் எறிந்து தாக்கினான். உம்முடைய கௌமோதகீ என்ற கதையால் அவனைக் கொன்றீர். சிசுபாலனைப் போல அவனும் தங்களுடன் ஐக்கியமானான். முற்பிறவியில் உம்மிடத்திலேயே மனதைச் செலுத்திய எல்லாருக்கும் மோக்ஷம் அளிப்பதற்காகவே இந்த அவதாரம் எடுத்திருக்கிறீர்.

त्वय्यायातेऽथ जाते किल कुरुसदसि द्यूतके संयताया:
क्रन्दन्त्या याज्ञसेन्या: सकरुणमकृथाश्चेलमालामनन्ताम् ।
अन्नान्तप्राप्तशर्वांशजमुनिचकितद्रौपदीचिन्तितोऽथ
प्राप्त: शाकान्नमश्नन् मुनिगणमकृथास्तृप्तिमन्तं वनान्ते ॥४॥

த்வய்யாயாதே(அ)த₂ ஜாதே கில குருஸத₃ஸி த்₃யூதகே ஸம்யதாயா:
க்ரந்த₃ந்த்யா யாஜ்ஞஸேந்யா: ஸகருணமக்ருதா₂ஶ்சேலமாலாமநந்தாம் |
அந்நாந்தப்ராப்தஶர்வாம்ஶஜமுநிசகிதத்₃ரௌபதீ₃சிந்திதோ(அ)த₂
ப்ராப்த: ஶாகாந்நமஶ்நந் முநிக₃ணமக்ருதா₂ஸ்த்ருப்திமந்தம் வநாந்தே || 4||

4. தாங்கள் துவாரகை சென்றதும், கௌரவர்களின் சபையில், கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே சூதாட்டம் நடந்தது. (பாண்டவர்கள் தங்கள் சொத்துக்களை இழந்தனர். திரௌபதியையும் பணயமாக வைத்துத் தோற்றனர்). பலபேர் முன்னிலையில், துச்சாதனன் திரௌபதியின் தலைமுடியைப் பற்றி இழுத்து வந்து, துகிலுரித்து மானபங்கப்படுத்தினான். கதியற்ற திரௌபதி தங்களை வேண்டிக் கதறி அழுதாள். தாங்கள் கணக்கிலடங்காத வஸ்திரங்கள் அளித்து அவளுக்கு உதவினீர்கள். பாண்டவர்கள் காட்டில் வசிக்கும்போது, ஒரு நாள் அனைவரும் உண்டபின், துர்வாசர் தனது கூட்டத்தினருடன் உணவுண்ண வந்தார். உணவில்லாததால் திரௌபதி மிகவும் பயந்து தங்களைத் துதித்து வேண்டினாள். தாங்கள் பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டு இருந்த கீரையைச் சாப்பிட்டு, முனிவருக்கும் அவருடன் வந்திருந்தவர்களுக்கும் உண்ட திருப்தி கிடைக்கச் செய்தீர்கள்.

युद्धोद्योगेऽथ मन्त्रे मिलति सति वृत: फल्गुनेन त्वमेक:
कौरव्ये दत्तसैन्य: करिपुरमगमो दूत्यकृत् पाण्डवार्थम् ।
भीष्मद्रोणादिमान्ये तव खलु वचने धिक्कृते कौरवेण
व्यावृण्वन् विश्वरूपं मुनिसदसि पुरीं क्षोभयित्वागतोऽभू: ॥५॥

யுத்₃தோ₄த்₃யோகே₃(அ)த₂ மந்த்ரே மிலதி ஸதி வ்ருத: ப₂ல்கு₃நேந த்வமேக:
கௌரவ்யே த₃த்தஸைந்ய: கரிபுரமக₃மோ தூ₃த்யக்ருத் பாண்ட₃வார்த₂ம் |
பீ₄ஷ்மத்₃ரோணாதி₃மாந்யே தவ க₂லு வசநே தி₄க்க்ருதே கௌரவேண
வ்யாவ்ருண்வந் விஶ்வரூபம் முநிஸத₃ஸி புரீம் க்ஷோப₄யித்வாக₃தோ(அ)பூ₄: || 5||

5. யுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அர்ஜுனன் தங்களைத் துணையாகவும், துரியோதனன் தங்களுடைய சைன்யத்தையும் விரும்பினார்கள். அவ்வாறே அளித்துவிட்டு, ஹஸ்தினாபுரத்திற்கு சமாதானத் தூது சென்றீர். பீஷ்மர், துரோணர் போன்றவர்கள் தங்கள் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தாலும், துரியோதனன் ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கேயே தங்களது விஸ்வரூபத்தைக் காட்டி ஹஸ்தினாபுரத்தை நடுங்கச் செய்தீர். பிறகு துவாரகை சென்றீர்.

जिष्णोस्त्वं कृष्ण सूत: खलु समरमुखे बन्धुघाते दयालुं
खिन्नं तं वीक्ष्य वीरं किमिदमयि सखे नित्य एकोऽयमात्मा ।
को वध्य: कोऽत्र हन्ता तदिह वधभियं प्रोज्झ्य मय्यर्पितात्मा
धर्म्यं युद्धं चरेति प्रकृतिमनयथा दर्शयन् विश्वरूपम् ॥६॥

ஜிஷ்ணோஸ்த்வம் க்ருஷ்ண ஸூத: க₂லு ஸமரமுகே₂ ப₃ந்து₄கா₄தே த₃யாலும்
கி₂ந்நம் தம் வீக்ஷ்ய வீரம் கிமித₃மயி ஸகே₂ நித்ய ஏகோ(அ)யமாத்மா |
கோ வத்₄ய: கோ(அ)த்ர ஹந்தா ததி₃ஹ வத₄பி₄யம் ப்ரோஜ்ஜ்₂ய மய்யர்பிதாத்மா
த₄ர்ம்யம் யுத்₃த₄ம் சரேதி ப்ரக்ருதிமநயதா₂ த₃ர்ஶயந் விஶ்வரூபம் || 6||

6. அர்ஜுனனின் தேரோட்டியாக வந்த தாங்கள், யுத்தத்தின் துவக்கத்தில் தன்னுடைய உறவினர்களை வதம் செய்ய விரும்பாமல் மனம் வருந்திய அர்ஜுனனைக் கண்டீர். அவனுக்கு, “ நண்பனே! ஆத்மா என்பது என்றும் அழிவில்லாதது. கொல்பவன், கொல்லப்படுகிறவன் என்பவர் இங்கே யார்? எனவே, கொல்வதைப் பற்றிய பயத்தை விட்டு, என்னிடத்தில் சரணடைந்து, நேர்மையான யுத்தத்தைச் செய்” என்று அவனுக்கு உபதேசம் செய்து, அவனுக்கு விஸ்வரூபத்தைக் காட்டி, அவனைத் தன் நிலைமையை அடையச் செய்தீர்.

भक्तोत्तंसेऽथ भीष्मे तव धरणिभरक्षेपकृत्यैकसक्ते
नित्यं नित्यं विभिन्दत्ययुतसमधिकं प्राप्तसादे च पार्थे ।
निश्शस्त्रत्वप्रतिज्ञां विजहदरिवरं धारयन् क्रोधशाली-
वाधावन् प्राञ्जलिं तं नतशिरसमथो वीक्ष्य मोदादपागा: ॥७॥

ப₄க்தோத்தம்ஸே(அ)த₂ பீ₄ஷ்மே தவ த₄ரணிப₄ரக்ஷேபக்ருத்யைகஸக்தே
நித்யம் நித்யம் விபி₄ந்த₃த்யயுதஸமதி₄கம் ப்ராப்தஸாதே₃ ச பார்தே₂ |
நிஶ்ஶஸ்த்ரத்வப்ரதிஜ்ஞாம் விஜஹத₃ரிவரம் தா₄ரயந் க்ரோத₄ஶாலீ-
வாதா₄வந் ப்ராஞ்ஜலிம் தம் நதஶிரஸமதோ₂ வீக்ஷ்ய மோதா₃த₃பாகா₃: || 7||

7. பூபாரத்தைப் போக்கும் தங்கள் நோக்கத்தில், தங்கள் பக்தரான பீஷ்மர் ஒவ்வொரு நாளும் பதினாயிரம் அரசர்களை வதம் செய்தார். அர்ஜுனன் பீஷ்மரை எதிர்த்து மிகவும் சோர்வடைந்தான். அதைக் கண்ட தாங்கள், போரில் ஆயுதம் எடுப்பதில்லை என்ற தங்கள் பிரதிக்ஞையை மீறி சுதர்சன சக்கரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கோபத்துடன் பீஷ்மரை நோக்கி ஓடினீர். தங்களைக் கண்டதும் பீஷ்மர் தலைவணங்கியதைக் கண்டு சந்தோஷித்து, அவரைத் தாக்காமல் திரும்பினீர்.

युद्धे द्रोणस्य हस्तिस्थिररणभगदत्तेरितं वैष्णवास्त्रं
वक्षस्याधत्त चक्रस्थगितरविमहा: प्रार्दयत्सिन्धुराजम् ।
नागास्त्रे कर्णमुक्ते क्षितिमवनमयन् केवलं कृत्तमौलिं
तत्रे त्रापि पार्थं किमिव नहि भवान् पाण्डवानामकार्षीत् ॥८॥

யுத்₃தே₄ த்₃ரோணஸ்ய ஹஸ்திஸ்தி₂ரரணப₄க₃த₃த்தேரிதம் வைஷ்ணவாஸ்த்ரம்
வக்ஷஸ்யாத₄த்த சக்ரஸ்த₂கி₃தரவிமஹா: ப்ரார்த₃யத்ஸிந்து₄ராஜம் |
நாகா₃ஸ்த்ரே கர்ணமுக்தே க்ஷிதிமவநமயந் கேவலம் க்ருத்தமௌலிம்
தத்ரே த்ராபி பார்த₂ம் கிமிவ நஹி ப₄வாந் பாண்ட₃வாநாமகார்ஷீத் || 8||

8. துரோணருடன் போர் புரிந்தபோது, நரகாசுரனின் பிள்ளையான பகதத்தன், நான்கு தந்தமுள்ள யானைமீது ஏறிவந்து வைஷ்ணவாஸ்திரத்தை ஏவினான். அதைத் தங்கள் மார்பில் தாங்கிக் கொண்டு அர்ஜுனனைக் காப்பாற்றினீர். தங்களுடைய சக்ராயுதத்தால் சூரியனை மறைத்து, அர்ஜுனனைக் கொண்டு ஜயத்ரதனைக் கொன்றீர். கர்ணன் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஏவினான். தாங்கள் கால் கட்டைவிரலால் பூமியை அழுத்தி, அர்ஜுனனின் கிரீடத்தை மட்டும் அறுக்கும்படி செய்தீர். பாண்டவர்களின் நலனுக்காக நீர் எதைத்தான் செய்யவில்லை?

युद्धादौ तीर्थगामी स खलु हलधरो नैमिशक्षेत्रमृच्छ-
न्नप्रत्युत्थायिसूतक्षयकृदथ सुतं तत्पदे कल्पयित्वा ।
यज्ञघ्नं वल्कलं पर्वणि परिदलयन् स्नाततीर्थो रणान्ते
सम्प्राप्तो भीमदुर्योधनरणमशमं वीक्ष्य यात: पुरीं ते ॥९॥

யுத்₃தா₄தௌ₃ தீர்த₂கா₃மீ ஸ க₂லு ஹலத₄ரோ நைமிஶக்ஷேத்ரம்ருச்ச₂-
ந்நப்ரத்யுத்தா₂யிஸூதக்ஷயக்ருத₃த₂ ஸுதம் தத்பதே₃ கல்பயித்வா |
யஜ்ஞக்₄நம் வல்கலம் பர்வணி பரித₃லயந் ஸ்நாததீர்தோ₂ ரணாந்தே
ஸம்ப்ராப்தோ பீ₄மது₃ர்யோத₄நரணமஶமம் வீக்ஷ்ய யாத: புரீம் தே || 9||

9. போர் ஆரம்பித்தபோது தீர்த்தயாத்திரை சென்ற பலராமன், நைமிசாரண்யம் சென்றார். தன்னை மதிக்காத ஸூதபௌராணிகரைக் கொன்றார். அந்த ஸ்தானத்தில் அவருடைய மகனை நியமித்தார். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் யாகங்களுக்கு இடையூறு செய்த வல்வலன் என்ற அசுரனைக் கொன்றார். பின்னர், தீர்த்த யாத்திரையை முடித்துக் கொண்டு குருக்ஷேத்ரம் வந்தார். பீமனும் துரியோதனனும் நீண்ட சண்டை செய்வதைப் பார்த்து துவாரகைக்குச் சென்றார்.

संसुप्तद्रौपदेयक्षपणहतधियं द्रौणिमेत्य त्वदुक्त्या
तन्मुक्तं ब्राह्ममस्त्रं समहृत विजयो मौलिरत्नं च जह्रे ।
उच्छित्यै पाण्डवानां पुनरपि च विशत्युत्तरागर्भमस्त्रे
रक्षन्नङ्गुष्ठमात्र: किल जठरमगाश्चक्रपाणिर्विभो त्वम् ॥१०॥

ஸம்ஸுப்தத்₃ரௌபதே₃யக்ஷபணஹததி₄யம் த்₃ரௌணிமேத்ய த்வது₃க்த்யா
தந்முக்தம் ப்₃ராஹ்மமஸ்த்ரம் ஸமஹ்ருத விஜயோ மௌலிரத்நம் ச ஜஹ்ரே |
உச்சி₂த்யை பாண்ட₃வாநாம் புநரபி ச விஶத்யுத்தராக₃ர்ப₄மஸ்த்ரே
ரக்ஷந்நங்கு₃ஷ்ட₂மாத்ர: கில ஜட₂ரமகா₃ஶ்சக்ரபாணிர்விபோ₄ த்வம் || 10||

10. துரோணரின் மகனான அஸ்வத்தாமன், தூங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் பிள்ளைகளைக் கொன்று விட்டான். தங்கள் உத்தரவின்பேரில் அர்ஜுனன் அவன் மீது விடுத்த பிரம்மாஸ்திரம், அவனுடைய சிரோமணியைத் துன்புறுத்தித் திரும்பி வந்தது. அஸ்வத்தாமன், பாண்டவ வம்சத்தை வேரோடு அழிக்க, மீண்டும் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது, அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த சிசுவை எரிக்கத் தொடங்கியது. தாங்கள் கட்டைவிரல் அளவுள்ள உருவமெடுத்து சுதர்சன சக்கரத்துடன் உத்தரையின் கருப்பைக்குள் பிரவேசித்து அந்த சிசுவைக் காத்தீர்.

धर्मौघं धर्मसूनोरभिदधदखिलं छन्दमृत्युस्स भीष्म-
स्त्वां पश्यन् भक्तिभूम्नैव हि सपदि ययौ निष्कलब्रह्मभूयम् ।
संयाज्याथाश्वमेधैस्त्रिभिरतिमहितैर्धर्मजं पूर्णकामं
स्म्प्राप्तो द्वरकां त्वं पवनपुरपते पाहि मां सर्वरोगात् ॥११॥

த₄ர்மௌக₄ம் த₄ர்மஸூநோரபி₄த₃த₄த₃கி₂லம் ச₂ந்த₃ம்ருத்யுஸ்ஸ பீ₄ஷ்ம-
ஸ்த்வாம் பஶ்யந் ப₄க்திபூ₄ம்நைவ ஹி ஸபதி₃ யயௌ நிஷ்கலப்₃ரஹ்மபூ₄யம் |
ஸம்யாஜ்யாதா₂ஶ்வமேதை₄ஸ்த்ரிபி₄ரதிமஹிதைர்த₄ர்மஜம் பூர்ணகாமம்
ஸ்ம்ப்ராப்தோ த்₃வரகாம் த்வம் பவநபுரபதே பாஹி மாம் ஸர்வரோகா₃த் || 11||

11. விரும்பிய நேரத்தில் மரணத்தை அடையும் சக்தியைப் பெற்ற பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு அனைத்து தர்மங்களையும் உபதேசித்தார். தீவிரமான பக்தியுடன் உம்மையே பார்த்துக் கொண்டு மோக்ஷத்தை அடைந்தார். பின்னர், யுதிஷ்டிரர் மூன்று அஸ்வமேத யாகங்களைச் செய்யத் துணை புரிந்து, அவரது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து, துவாரகை திரும்பினீர். குருவாயூரப்பனே! எல்லா வியாதிகளில் இருந்தும் என்னைக் காத்து அருள் புரிய வேண்டும்.

1 comment: