Wednesday, June 4, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 96

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 96, ஸ்ரீ நாராயணீயம் 96வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam, Srimad Narayaneeyam

த³ஶகம் -96
பகவானின் பெருமை மற்றும் ஞான, கர்ம, பக்தி யோகம்

 त्वं हि ब्रह्मैव साक्षात् परमुरुमहिमन्नक्षराणामकार-
स्तारो मन्त्रेषु राज्ञां मनुरसि मुनिषु त्वं भृगुर्नारदोऽपि ।
प्रह्लादो दानवानां पशुषु च सुरभि: पक्षिणां वैनतेयो
नागानामस्यनन्तस्सुरसरिदपि च स्रोतसां विश्वमूर्ते ॥१॥

த்வம் ஹி ப்₃ரஹ்மைவ ஸாக்ஷாத் பரமுருமஹிமந்நக்ஷராணாமகார-
ஸ்தாரோ மந்த்ரேஷு ராஜ்ஞாம் மநுரஸி முநிஷு த்வம் ப்₄ருகு₃ர்நாரதோ₃(அ)பி |
ப்ரஹ்லாதோ₃ தா₃நவாநாம் பஶுஷு ச ஸுரபி₄: பக்ஷிணாம் வைநதேயோ
நாகா₃நாமஸ்யநந்தஸ்ஸுரஸரித₃பி ச ஸ்ரோதஸாம் விஶ்வமூர்தே || 1||

1. மிகுந்த பெருமை வாய்ந்தவனே! உலக நாயகனே! தாங்களே உயர்ந்த பரப்ரம்மம். எழுத்துக்களில் அகாரமாகவும், மந்திரங்களில் பிரணவமாகவும், மன்னர்களில் மனுவாகவும், ரிஷிகளில் பிருகுவாகவும், நாரதராகவும், அசுரர்களில் பிரஹ்லாதனாகவும், மிருகங்களில் காமதேனு என்ற தெய்வீகப் பசுவாகவும், பறவைகளில் கருடனாகவும், பாம்புகளில் அனந்தனாகவும், நதிகளில் கங்கையாகவும் இருக்கிறீர்.

ब्रह्मण्यानां बलिस्त्वं क्रतुषु च जपयज्ञोऽसि वीरेषु पार्थो
भक्तानामुद्धवस्त्वं बलमसि बलिनां धाम तेजस्विनां त्वम् ।
नास्त्यन्तस्त्वद्विभूतेर्विकसदतिशयं वस्तु सर्वं त्वमेव
त्वं जीवस्त्वं प्रधानं यदिह भवदृते तन्न किञ्चित् प्रपञ्चे ॥२॥

ப்₃ரஹ்மண்யாநாம் ப₃லிஸ்த்வம் க்ரதுஷு ச ஜபயஜ்ஞோ(அ)ஸி வீரேஷு பார்தோ₂
ப₄க்தாநாமுத்₃த₄வஸ்த்வம் ப₃லமஸி ப₃லிநாம் தா₄ம தேஜஸ்விநாம் த்வம் |
நாஸ்த்யந்தஸ்த்வத்₃விபூ₄தேர்விகஸத₃திஶயம் வஸ்து ஸர்வம் த்வமேவ
த்வம் ஜீவஸ்த்வம் ப்ரதா₄நம் யதி₃ஹ ப₄வத்₃ருதே தந்ந கிஞ்சித் ப்ரபஞ்சே || 2||

2. பிராம்மண பக்தர்களில் மகாபலியாகவும், யக்ஞங்களில் ஜபயக்ஞமாகவும், வீரர்களில் அர்ஜுனனாகவும், பக்தர்களில் உத்தவராகவும், வல்லவர்களின் பலமாகவும், ஒளி பொருந்தியவர்களின் ஒளியாகவும் இருக்கிறீர். உம்முடைய பெருமைக்கு முடிவே இல்லை. உலகில் உள்ள ஆச்சரியமான பொருட்கள் அனைத்தும் தாங்களே. நீரே ஜீவன், நீரே பிரக்ருதி. இந்த அகிலத்தில் தாங்கள் இல்லாதது என்று எதுவுமே இல்லை.

धर्मं वर्णाश्रमाणां श्रुतिपथविहितं त्वत्परत्वेन भक्त्या
कुर्वन्तोऽन्तर्विरागे विकसति शनकै: सन्त्यजन्तो लभन्ते ।
सत्तास्फूर्तिप्रियत्वात्मकमखिलपदार्थेषु भिन्नेष्वभिन्नं
निर्मूलं विश्वमूलं परममहमिति त्वद्विबोधं विशुद्धम् ॥३॥

த₄ர்மம் வர்ணாஶ்ரமாணாம் ஶ்ருதிபத₂விஹிதம் த்வத்பரத்வேந ப₄க்த்யா
குர்வந்தோ(அ)ந்தர்விராகே₃ விகஸதி ஶநகை: ஸந்த்யஜந்தோ லப₄ந்தே |
ஸத்தாஸ்பூ₂ர்திப்ரியத்வாத்மகமகி₂லபதா₃ர்தே₂ஷு பி₄ந்நேஷ்வபி₄ந்நம்
நிர்மூலம் விஶ்வமூலம் பரமமஹமிதி த்வத்₃விபோ₃த₄ம் விஶுத்₃த₄ம் || 3||

3. நான்கு வர்ணங்கள், நான்கு ஆச்ரமங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள், வேதத்தில் சொல்லப்பட்ட தர்ம வழியில் செயல்பட்டு, பக்தியோடு அனைத்தையும் உம்மிடமே அர்ப்பணிக்கின்றனர். வைராக்கியம் தோன்றியதும் முறைப்படி அக்கர்மங்களை விடுகின்றனர். பிறகு, உண்மையான அறிவை அடைந்து, சச்சிதானந்த வடிவானவரும், எல்லாவற்றிலும் காணப்படுகிறவரும், பிறப்பு, இறப்பு முதலியவற்றுக்குக் காரணமாய் இருப்பவரும், தனக்கென காரணம் ஒன்றுமில்லாதவரும், பரிசுத்தமானவருமான உம்மை அறிந்து, பேரின்ப ஞானத்தை அடைகிறார்கள்.

ज्ञानं कर्मापि भक्तिस्त्रितयमिह भवत्प्रापकं तत्र ताव-
न्निर्विण्णानामशेषे विषय इह भवेत् ज्ञानयोगेऽधिकार: ।
सक्तानां कर्मयोगस्त्वयि हि विनिहितो ये तु नात्यन्तसक्ता:
नाप्यत्यन्तं विरक्तास्त्वयि च धृतरसा भक्तियोगो ह्यमीषाम् ॥४॥

ஜ்ஞாநம் கர்மாபி ப₄க்திஸ்த்ரிதயமிஹ ப₄வத்ப்ராபகம் தத்ர தாவ-
ந்நிர்விண்ணாநாமஶேஷே விஷய இஹ ப₄வேத் ஜ்ஞாநயோகே₃(அ)தி₄கார: |
ஸக்தாநாம் கர்மயோக₃ஸ்த்வயி ஹி விநிஹிதோ யே து நாத்யந்தஸக்தா:
நாப்யத்யந்தம் விரக்தாஸ்த்வயி ச த்₄ருதரஸா ப₄க்தியோகோ₃ ஹ்யமீஷாம் || 4||

4. இவ்வுலகில், ஞானம், கர்மம், பக்தி என்ற மூன்று மார்க்கங்களால் உம்மை அடைய முடியும். விஷயங்களில் பற்றற்றிருப்பவருக்கு ஞானயோகம் தகுந்தது. விஷய சுகங்களில் ஆசை உள்ளவர்களுக்குக் கர்ம யோகம் சிறந்தது. விஷய சுகங்களில் அதிகம் பற்றில்லாமல், அதனைத் துறக்கவும் முடியாமல், தங்கள் லீலைகளைக் கேட்டு மகிழ்பவர்களுக்குப் பக்தி யோகமே சிறந்தது.

ज्ञानं त्वद्भक्ततां वा लघु सुकृतवशान्मर्त्यलोके लभन्ते
तस्मात्तत्रैव जन्म स्पृहयति भगवन् नाकगो नारको वा ।
आविष्टं मां तु दैवाद्भवजलनिधिपोतायिते मर्त्यदेहे
त्वं कृत्वा कर्णधारं गुरुमनुगुणवातायितस्तारयेथा: ॥५॥

ஜ்ஞாநம் த்வத்₃ப₄க்ததாம் வா லகு₄ ஸுக்ருதவஶாந்மர்த்யலோகே லப₄ந்தே
தஸ்மாத்தத்ரைவ ஜந்ம ஸ்ப்ருஹயதி ப₄க₃வந் நாககோ₃ நாரகோ வா |
ஆவிஷ்டம் மாம் து தை₃வாத்₃ப₄வஜலநிதி₄போதாயிதே மர்த்யதே₃ஹே
த்வம் க்ருத்வா கர்ணதா₄ரம் கு₃ருமநுகு₃ணவாதாயிதஸ்தாரயேதா₂: || 5||

5. இவ்வுலகில் நற்பலன்களால் ஞானம் அல்லது பக்தியை அடைகிறார்கள். ஸ்வர்க்கம் மற்றும் நரகத்திலுள்ளவர்கள் கூட மனிதப் பிறப்பை விரும்புகின்றார்கள். ஸம்ஸாரம் என்னும் கடலைக் கடக்க இந்த உடல் படகாக இருக்கிறது. நல்வினையால் இந்த உடலில் பிரவேசித்த எனக்கு, குரு என்னும் ஓடக்காரனை அளித்து, தாங்கள் சாதகமான காற்றாக இருந்து கரையேற்ற வேண்டுகிறேன்.

अव्यक्तं मार्गयन्त: श्रुतिभिरपि नयै: केवलज्ञानलुब्धा:
क्लिश्यन्तेऽतीव सिद्धिं बहुतरजनुषामन्त एवाप्नुवन्ति ।
दूरस्थ: कर्मयोगोऽपि च परमफले नन्वयं भक्तियोग-
स्त्वामूलादेव हृद्यस्त्वरितमयि भवत्प्रापको वर्धतां मे ॥६॥

அவ்யக்தம் மார்க₃யந்த: ஶ்ருதிபி₄ரபி நயை: கேவலஜ்ஞாநலுப்₃தா₄:
க்லிஶ்யந்தே(அ)தீவ ஸித்₃தி₄ம் ப₃ஹுதரஜநுஷாமந்த ஏவாப்நுவந்தி |
தூ₃ரஸ்த₂: கர்மயோகோ₃(அ)பி ச பரமப₂லே நந்வயம் ப₄க்தியோக₃-
ஸ்த்வாமூலாதே₃வ ஹ்ருத்₃யஸ்த்வரிதமயி ப₄வத்ப்ராபகோ வர்த₄தாம் மே || 6||

6. ஞானத்தை விரும்புபவர்கள், உபநிஷத்துக்களும், சாத்திரங்களும் கூறிய வழிகளில், வெளிப்படையாகப் புலப்படாத பிரம்மத்தைத் தேடிக் கஷ்டத்தை அடைகிறார்கள். பல பிறவிகளுக்குப் பிறகு சித்தியடைகிறார்கள். கர்ம யோகமும் மோக்ஷத்திற்கு வெகு தொலைவில் இருக்கிறது. ஆனால் பக்தி யோகமானது, ஆரம்பத்திலிருந்தே மனதைக் கவர்ந்து, தங்களை அடைய விரைவில் வழிவகுக்கிறது. அந்த பக்தியானது எனக்கு மேன்மேலும் வளர வேண்டும்.

ज्ञानायैवातियत्नं मुनिरपवदते ब्रह्मतत्त्वं तु शृण्वन्
गाढं त्वत्पादभक्तिं शरणमयति यस्तस्य मुक्ति: कराग्रे ।
त्वद्ध्यानेऽपीह तुल्या पुनरसुकरता चित्तचाञ्चल्यहेतो-
रभ्यासादाशु शक्यं तदपि वशयितुं त्वत्कृपाचारुताभ्याम् ॥७॥

ஜ்ஞாநாயைவாதியத்நம் முநிரபவத₃தே ப்₃ரஹ்மதத்த்வம் து ஶ்ருண்வந்
கா₃ட₄ம் த்வத்பாத₃ப₄க்திம் ஶரணமயதி யஸ்தஸ்ய முக்தி: கராக்₃ரே |
த்வத்₃த்₄யாநே(அ)பீஹ துல்யா புநரஸுகரதா சித்தசாஞ்சல்யஹேதோ-
ரப்₄யாஸாதா₃ஶு ஶக்யம் தத₃பி வஶயிதும் த்வத்க்ருபாசாருதாப்₄யாம் || 7||

7. ஞானத்திற்காக அதிக முயற்சி செய்வதை வியாஸர் புராணங்களில் அதிருப்தியுடன் கூறியிருக்கிறார். பிரம்மதத்வத்தைக் கேட்டு, தங்கள் திருவடிகளில் உறுதியான பக்தியுடன் சரணடைகின்றவனுக்கு கையிலேயே மோக்ஷம் இருக்கிறது. மனம் அலைபாய்வதால் தியான யோகமும் ஞானயோகத்தை போலவே கஷ்டமாய் இருக்கிறது. ஆனால் பயிற்சியினாலும், உம்முடைய கருணையாலும், அழகினாலும் விரைவிலேயே தியானத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

निर्विण्ण: कर्ममार्गे खलु विषमतमे त्वत्कथादौ च गाढं
जातश्रद्धोऽपि कामानयि भुवनपते नैव शक्नोमि हातुम् ।
तद्भूयो निश्चयेन त्वयि निहितमना दोषबुद्ध्या भजंस्तान्
पुष्णीयां भक्तिमेव त्वयि हृदयगते मङ्क्षु नङ्क्ष्यन्ति सङ्गा: ॥८॥

நிர்விண்ண: கர்மமார்கே₃ க₂லு விஷமதமே த்வத்கதா₂தௌ₃ ச கா₃ட₄ம்
ஜாதஶ்ரத்₃தோ₄(அ)பி காமாநயி பு₄வநபதே நைவ ஶக்நோமி ஹாதும் |
தத்₃பூ₄யோ நிஶ்சயேந த்வயி நிஹிதமநா தோ₃ஷபு₃த்₃த்₄யா ப₄ஜம்ஸ்தாந்
புஷ்ணீயாம் ப₄க்திமேவ த்வயி ஹ்ருத₃யக₃தே மங்க்ஷு நங்க்ஷ்யந்தி ஸங்கா₃: || 8||

8. லோகநாதா! கர்ம யோகத்தில் நாட்டமில்லாமல், தங்கள் கதைகளிலே உறுதியான நம்பிக்கையுடன் இருந்தும், என்னால் ஆசைகளைத் துறக்க முடியவில்லை. அதனால், ஆசைகளைப் பற்றிய விழிப்புணர்வுடன், உறுதியாக மீண்டும் தங்களிடத்திலேயே மனதை நிறுத்தி பக்தி செலுத்துகின்றேன். என் இதயத்தில் தாங்கள் புகுந்தவுடன், பற்றுக்களும் அழிந்துவிடுகின்றன.

कश्चित् क्लेशार्जितार्थक्षयविमलमतिर्नुद्यमानो जनौघै:
प्रागेवं प्राह विप्रो न खलु मम जन: कालकर्मग्रहा वा।
चेतो मे दु:खहेतुस्तदिह गुणगणं भावयत्सर्वकारी-
त्युक्त्वा शान्तो गतस्त्वां मम च कुरु विभो तादृशी चित्तशान्तिम् ॥९॥

கஶ்சித் க்லேஶார்ஜிதார்த₂க்ஷயவிமலமதிர்நுத்₃யமாநோ ஜநௌகை₄:
ப்ராகே₃வம் ப்ராஹ விப்ரோ ந க₂லு மம ஜந: காலகர்மக்₃ரஹா வா|
சேதோ மே து₃:க₂ஹேதுஸ்ததி₃ஹ கு₃ணக₃ணம் பா₄வயத்ஸர்வகாரீ-
த்யுக்த்வா ஶாந்தோ க₃தஸ்த்வாம் மம ச குரு விபோ₄ தாத்₃ருஶீ சித்தஶாந்திம் || 9||

9. முன்னொரு சமயம், ஒரு அந்தணன் மிகவும் கடினமாக தர்மமின்றி பொருள் சேர்த்து, பின் அனைத்து செல்வங்களையும் இழந்தான். மனம் வெறுத்து சன்யாசியானான். கபட சன்யாசி என்று மக்கள் துன்புறுத்தினர். அப்போது அவன், “ துன்பத்திற்கு என் மனமே காரணம். மக்களோ, காலநேரமோ, கர்மமோ, கிரகங்களோ அல்ல. மனம்தான் எல்லாவற்றையும் செய்கிறது” என்று கூறிக் கொண்டு மன அமைதி பெற்று உம்மை அடைந்தான். பிரபோ! அவ்வாறான மன அமைதியை எனக்கு அளிக்க வேண்டும்.

ऐल: प्रागुर्वशीं प्रत्यतिविवशमना: सेवमानश्चिरं तां
गाढं निर्विद्य भूयो युवतिसुखमिदं क्षुद्रमेवेति गायन् ।
त्वद्भक्तिं प्राप्य पूर्ण: सुखतरमचरत्तद्वदुद्धूतसङ्गं
भक्तोत्तंसं क्रिया मां पवनपुरपते हन्त मे रुन्धि रोगान् ॥१०॥

ஐல: ப்ராகு₃ர்வஶீம் ப்ரத்யதிவிவஶமநா: ஸேவமாநஶ்சிரம் தாம்
கா₃ட₄ம் நிர்வித்₃ய பூ₄யோ யுவதிஸுக₂மித₃ம் க்ஷுத்₃ரமேவேதி கா₃யந் |
த்வத்₃ப₄க்திம் ப்ராப்ய பூர்ண: ஸுக₂தரமசரத்தத்₃வது₃த்₃தூ₄தஸங்க₃ம்
ப₄க்தோத்தம்ஸம் க்ரியா மாம் பவநபுரபதே ஹந்த மே ருந்தி₄ ரோகா₃ந் || 10||

10. புரூரவஸ் என்ற அரசன் ஊர்வசியிடம் ஆசை கொண்டு அவளுடன் நீண்ட காலம் வாழ்ந்து வந்தான். பிறகு வைராக்கியத்தை அடைந்து, பெண்ணாசை மிகவும் அற்பமானது என்று கூறிக்கொண்டு, உம்மிடம் பக்தி கொண்டு ஆனந்தம் அடைந்தான். குருவாயூரப்பா! அவ்வாறே என் ஆசைகளை அகற்றி, என்னை உமது சிறந்த பக்தனாக ஆக்கி, என் வியாதிகளையும் போக்க வேண்டும்.

No comments:

Post a Comment