Tuesday, August 1, 2017

ஆதிரங்கம் - ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் திருக்கோயில் / ஆதிரங்கம்(திருத்துறைப்பூண்டி) ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 38


 ஆதிரங்கம் ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் கோயில், கட்டிமேடு  ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் கோயில், TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்
ஆதிரங்கம். திருத்துறைப்பூண்டிக்கு ஒரு திருமணத்திற்காகச் சென்றபோது இந்த ஊரைப் பற்றியும் இந்தக் கோவில் பற்றியும் சொன்னார்கள். ஆதிரங்கம் இயற்கை விவசாயப் பண்ணைக்குப் பெயர்போனது என்றும், இந்திய பாரம்பரிய நெல் விதைகளின் கருவூலம் என்றும், இந்த ஊரில், 180 வகையான பாரம்பரிய நெல் விதைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்பதும் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டோம். ஆதிரங்கத்தில் ரங்கநாதர் மிக அழகாக இருப்பார், அபிமானஸ்தலம் என்று கேட்டவுடன், அருகில்தானே இருக்கிறது, சென்று வரலாம் என்று புறப்பட்டோம்.

ஆதிரங்கம் ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் கோயில். இந்தக் கோயில் திருவாரூர் மாவட்டம், முள்ளியாற்றின் கிழக்கே திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு என்ற ஊரில் அமைந்துள்ளது. 
ஆதிரங்கம் ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் கோயில், கட்டிமேடு  ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் கோயில், TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்
பழமையான கோவில். சிறிய கோவில். சிறிய ராஜகோபுரம். உள்ளே கொடிமரம், பலிபீடம் கடந்து கருடன் சன்னதியின் சிறிய மண்டபம் கடந்து சென்றால் கர்ப்பக்ருஹத்தில் ரங்கநாதப்பெருமாள் பள்ளி கொண்ட ரங்கநாதராக சேவை சாதிக்கிறார். அபிமானஸ்தலமாகக் கருதப்படும் இந்தத் தலத்தில் மூர்த்தி மிகவும் அழகாக இருக்கின்றார். இத்தலம் பஞ்சரங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது என்றும், திருவரங்கம்(மத்தியரங்கம்), கர்நாடகத்திலுள்ள ஸ்ரீரங்கப்பட்டினம்(மேலரங்கம்), மாயவரம் பரிமள ரங்கன்(வடரங்கம்), இத்தலமான வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கட்டிமேடு (ஆதிரங்கம்), கீழையூர் அரங்கன் (கீழரங்கம்) என்றும், மார்க்கண்டேயர் அரங்கனின் அழகைக்காண பஞ்சரங்க க்ஷேத்ரமான இந்த ஐந்து தலங்களுக்கும் வந்து சேவித்திருக்கிறார் என்றும், ஸ்ரீரங்கம் போகமுடியாதவர்கள் இந்த ஸ்தலத்திற்கு வந்து பிரார்த்தனை செலுத்துவது உண்டு என்றும் பட்டர் சொன்னார். 

மூலவர் பள்ளி கொண்ட ரெங்கநாதப் பெருமாள் கிழக்கே புஜங்க சயனம். தாயார் ரங்கநாயகி. தனிக்கோயில் நாச்சியார். உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இந்த ரங்கனைத் தரிசனம் செய்தால் பூர்வ ஜன்ம பாபங்களும், சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அரங்கனை கண்குளிர சேவித்தோம்!

இக்கோயிலில் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஆண்டாள், பஞ்சமுக ஆஞ்சநேயர், கருடாழ்வார், காளிங்க நர்த்தனக் கண்ணன், சன்னதிகளும் உள்ளன. கோயில் புஷ்கரிணியில் தாமரை நிறைய படர்ந்திருக்கிறது. தேரும் உள்ளது. நாங்கள் சென்ற சமயம் கருட சேவையைக் கண்டு களித்தோம்!
ஆதிரங்கம் ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் கோயில், கட்டிமேடு  ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் கோயில், TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்

ஆதிரங்கம் ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் கோயில், கட்டிமேடு  ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் கோயில், TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்

ஆதிரங்கம் ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் கோயில், கட்டிமேடு  ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் கோயில், TEMPLE VISITS, அபிமான ஸ்தலம், கண்ணுக்கினியன கண்டோம்
இக்கோயிலில் பாஞ்சராத்ர முறைப்படி பூஜைகள் நடக்கின்றது. 
இக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பிற்காலங்களில் மற்ற சன்னதிகள் கட்டப்பட்டது என்றும் கூறுகின்றனர். ஒரு முறையேனும் செல்ல வேண்டிய திருத்தலம். இந்த ஊரின் அருகே உள்ள தில்லைவிளாகம் ராமர் கோவில் மிகவும் பிரசித்தம். தில்லைவிளாகம் ராமர் கோவில் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.

உற்சவங்கள்: சொர்க்க வாசல் திறப்பு, பிரம்மோற்சவம். அனைத்து திருவிழா, உற்சவங்களும் திருவரங்கத்தினைப் போலவே நடைபெறுகின்றன. மார்கழி மாதம் சொர்க்க வாசல் திறப்பு, மற்றும் வைகாசி மாதம் பிரம்மோற்சவமும் தேரோட்டமும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

வழி: தஞ்சை-திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் பஸ் மார்க்கம்
வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கட்டிமேடு - ஆதிரங்கம்

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8 - 12 , மாலை 5 - 7.30

முகவரி:
அருள்மிகு ரெங்கநாதப்பெருமாள் கோவில்
கட்டிமேடு-ஆதிரங்கம்,
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம்.

No comments:

Post a Comment